புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்..!

புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்..!

டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “கார்த்திகேயனும், காணாமல்  போன காதலியும்.’

இந்தப் படத்தில் தீபக், பிளாக்பாண்டி,  ஜெய்சிந்த் மூவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகிகளாக ஹரிதா, மலர் இருவரும் நடித்துள்ளனர். மேலும் கொட்டாச்சி, மதுமிதா, மிப்பு, ஹேமா,மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை - F.ராஜ் பரத், ஒளிப்பதிவு - டேவிட் ஜான்  D.F.TECH.,படத் தொகுப்பு - ஆனந்த் ஜெரால்டின், பாடல்கள் – வடிவரசு, இணை தயாரிப்பு - K. திலகர், தயாரிப்பு - மாரியப்பன் ராஜகோபால். எழுத்து, இயக்கம் - M.A. பாலா.

Indian Army-யில்  ஆறு  வருடங்கள்  ஸ்பெஷல்  சர்வீஸில்  இருந்த  M.A.பாலா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். பாலா, Diploma in Film Making  படித்துவிட்டு,  பல  குறும் படங்களையும்,  டெலிபிலிம்களையும் இயக்கியுள்ளார்.

Haritha (127)

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினைகள் இருக்குமென எப்படி நியூட்டனின் விதி சொல்கிறதோ,  அதே மாதிரி,  உலகின்  ஏதோ  ஒரு  மூலையில்  பட்டாம் பூச்சி சந்தோசமாய்  சிறகடித்து  சுற்றித்  திரிவதற்கும்,  இன்னொரு  பக்கம் சம்பந்தமேயில்லாமல்  எரிமலைகள்  வெடித்துச்  சிதறுவதற்கும்கூட  ஒரே  காரணம் இருக்கலாம்  என்கிறது  கேயாஸ் தியரி.  

தமிழ்  சினிமாக்களில், ‘தசாவதாரம்’ படத்திற்குப்  பிறகு  இவ்விதியைப் பயன்படுத்தி,  சுவாரஸ்யமாய்  திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் M.A.பாலா.

பார்க்காத காதல், சொல்லாத காதல் என தமிழ் சினிமாவின் அகராதியில் காதல் இல்லாத பக்கமே  இல்லை.  இந்தப்  படத்தில்,  தன்னுடைய  காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற  கார்த்திகேயனின்  வாழ்க்கையில்,  ஒரு  நாளில் நேர்கிற  விபரீதமான நிகழ்வுகளும்,  சம்பவங்களும்தான் படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.  இறுதியில் கார்த்திகேயன்  தனது  காதலியுடன்  சேர்ந்தாரா, இல்லையா என்பதுதான் கதையாம்.