full screen background image

தமிழ் ‘குயின்’ படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால்..!

தமிழ் ‘குயின்’ படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால்..!

ஹிந்தியில் நடிகை கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘குயின்.’ கங்கணா ரணாவத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது.

12.5 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘குயின்’, வசூலில் 97 கோடிகளைக் குவித்து சாதனை படைத்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த திரைப்படத்திற்கான இந்திய தேசிய விருது, சிறந்த நடிகைக்கான தேசிய விருது உட்பட 32 விருதுகளை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இப்போது இத்திரைப்படம் தமிழில் உருவாகவுள்ளது.

தயாரிப்பாளர் K.P.குமாரனின் மகனும், இரண்டாம் தலைமுறை தயாரிப்பாளருமான மனு குமாரன், ‘லைகர்’ மனோஜ் கேசவனோடு இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார். படத்திற்கு ‘பாரிஸ் பாரிஸ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, நாயகனாக சஷி வருண் நடிக்கிறார்.

இசை – அமித் திரிவேதி, ஒளிப்பதிவு – சத்யா ஹெக்டே, கலை – குணா கென்னெடி, வசனம் மற்றும் பாடல்கள் – தமிழச்சி தங்கபாண்டியன், எழுத்து – பங்கஜ் கபூர், ரமேஷ் அரவிந்த், இயக்கம் – ரமேஷ் அரவிந்த்.

Paris Paris Movie Launch Photos (25)

இந்தப் படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த், கடந்த இருபது வருடங்களாக அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகராகவும், இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.

நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தும், ஏழு படங்களை இயக்கியும், பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பிரபலமாகவும், இரண்டு புத்தகங்களை எழுதிய எழுத்தாளராகவும் இருக்கிறார் ரமேஷ் அரவிந்த்.

கமல்ஹாசன், K.பாலச்சந்தர், K.விஸ்வநாத் ஆகியோர் நடித்த ‘உத்தம வில்லன்’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் 2015-ம் ஆண்டு, தமிழில் திரைப்பட இயக்குநராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் மனு குமாரன், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தமிழ், துருக்கி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இதுவரை சுமார் 19 திரைப்படங்களைத் தயாரித்த அனுபவமிக்கவர்.

மாறுபட்ட திரைப்படங்களுக்கான ஒரு புதிய சந்தையையே உருவாக்கிய பெருமை 1998-ம் ஆண்டு அவர் தயாரித்த ‘பாம்பே பாய்ஸ்’ திரைப்படத்தையே சாரும்.

மனு குமாரன் கடந்த 2002-ம் ஆண்டில் மீடியன்ட் எனும் ஊடக தயாரிப்பு நிறுவனத்தையும், ABOB – BOYS BAND என்ற இந்தியாவின் முதல் சிறுவர்கள் இசைக் குழுவையும் நிறுவினார்.  இசைக் குழுவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இக்குழுவின் இசை – வாழ்க்கை பயணத்தையே முதல் அடித்தளமாகக் கொண்டு, முதல் திரைப்படமாக ‘கிஸ் கிஸ் கோ(Kiss Kis Ko)  என்ற பெயரில் தயாரித்தார்.

அடுத்ததாக, ஹென்ட்ரிக் இப்செனின் நாடகமான தி மாஸ்டர் பில்டரை தழுவி, அவர் தயாரித்த மலையாள திரைப்படம் ‘ஆகாச கோபுரம்’ பல விருதுகளை வென்றது.

மேலும் மனு குமாரன்,  மேற்கத்திய ரசிகர்களுக்காக ஹாலிவுட்டில் வெற்றித்  திரைபடங்கள் தயாரித்த முதல் இந்திய தயாரிப்பாளர் என்ற பெருமைக்குரியவர். நிக் கசவேட்ஸ் இயக்கத்தில் அவர் தயாரித்த ‘எல்லோ’(Yellow) திரைப்படமும், பாஃப்தா விருது வென்ற நோயல் கிளார்க் நடித்த ‘ஸ்டோரேஜ் 24’ (Storage 24) திரைப்படத்தையும் தயாரித்தவர். குறைந்த பொருட்செலவில் தரமான வெற்றித் திரைப்படங்கள் உருவாக்குவதில் வல்லவர்.

சிறிய நகரத்தைச் சேர்ந்த தன்னம்பிக்கை குறைவான ஒரு இளம் பெண்ணின் திருமணத்தை அவளது வருங்கால கணவனே தடுத்து நிறுத்திவிடுகிறான். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அப்பெண், தனியாகவே தேனிலவுக்கு செல்வது என முடிவெடுத்து, தனது பயணத்தை துவங்குகிறாள். அப்பயணத்தில் அவள் சந்தித்த புதிய மனிதர்களின் மூலம், அவளுக்கு ஏற்பட்ட புதுப்புது அனுபவங்களில் தனது சுய அடையாளத்தைக்   கண்டு கொள்கிறாள்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் என நான்கு தென்னக மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.   

Our Score