full screen background image

“தப்பு தண்டா’ சரியான  துவக்கத்தை கொடுத்திருக்கிறது…” – இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் பெருமிதம் 

“தப்பு தண்டா’ சரியான  துவக்கத்தை கொடுத்திருக்கிறது…” – இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் பெருமிதம் 

விரைவில் வெளியாக இருக்கும்  ‘தப்பு தண்டா’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கும் இசையமைப்பாளர் நரேன் பாலகுமாருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

thappu-thandaa-stills-13

‘தப்பு தண்டா’ திரைப்படத்திற்காக  இவர் இசை அமைத்த ‘டூப்ளிக்கா டோமாரி’ பாடல் யூடூபில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்த  ‘சென்னை சூப்பர் கிங்ஸ் கீதம்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சமர்ப்பணம் செய்யும் விதத்தில் இவர் இசையமைத்த ‘தலைவனுக்கு ஒரு பாட்டு’ ஆகிய பாடல்களை தவிர்த்து, இவர் பின்னணி இசையமைத்த  ‘ரே’, ‘மோரிபந்’, ‘ஊமை’ போன்ற  குறும்படங்களும் அமோக பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது இவருடைய இசையமைப்பில் கேமிரா கவிஞர் பாலுமகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த ‘தப்பு தண்டா’ படத்தை, ‘கிளாப்போர்டு புரொடக்ஷன்’ சார்பில் தயாரிப்பாளர் சத்தியமூர்த்தி தயாரித்துள்ளார். 

“டூப்ளிகா டோமாரி’ பாடல் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து இருப்பதற்கு முழு காரணம் ரசிகர்கள்தான். முதலில் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

எங்களின் ‘தப்பு தண்டா’ படத்தில் மொத்தம்  ஐந்து பாடல்கள் மற்றும்  ஒரு தீம் மியூசிக் இருக்கின்றது. இவை அனைத்திற்கும் வயோலின், கிட்டார், புல்லாங்குழல் என பெரும்பாலும் லைவ் இசை கருவிகளையே பயன்படுத்தி இருக்கின்றோம்.

அதுமட்டுமின்றி, பாடகர்கள்  சின்மயி, அபே, அல்போனேஸ் ஜோசப், ஹரிஹர சுதன், ஹைடி கார்ட்டி மற்றும் கானா வினோத் ஆகியோரின் குரல், ‘தப்பு தண்டா’ பாடல்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன்.

மும்பை நகரில் உள்ள ‘நியூ எட்ஜ் ஸ்டுடியோவில்’, பிரபல சவுண்ட் என்ஜினீயர் ஷதாப் ரவீன் தலைமையில் இந்த பாடல்கள் அனைத்தும் ரெக்கார்ட் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஆடியோ என்ஜினீயர் தபாஸ் நாயக்கின் மேற்பார்வையில்,   பின்னணி இசையை டிஜிட்டல் முறையில் மெருகேற்றும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

மிக விரைவில் வெளியாகும்  எங்களின் ‘தப்பு தண்டா’ படத்தின் பாடல்கள், ரசிகர்களின் உள்ளங்களை சரியானவிதத்தில் கவரும்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் நரேன் பாலகுமார்.

Our Score