“மைனா’, ‘சாட்டை’ போல ‘மொசக்குட்டி’யும் ஹிட்டாகும்..” – தயாரிப்பாளரின் நம்பிக்கை..!

“மைனா’, ‘சாட்டை’ போல ‘மொசக்குட்டி’யும் ஹிட்டாகும்..” – தயாரிப்பாளரின் நம்பிக்கை..!

மாபெரும் வெற்றி பெற்ற ‘மைனா’, ‘சாட்டை’ போன்ற படங்களை தயாரித்த ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ ஜான்மேக்ஸ் தயாரிப்பில் எம்.ஜீவன் இயக்கியிருக்கும் ‘மொசக்குட்டி’ படம் வரும் நவம்பர் 21-ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடித்திருக்கிறார். மேலும் பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், ‘யார்’ கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சுகுமார்

இசை – ரமேஷ் விநாயகம்

எடிட்டிங் – ஆண்டனி

நடனம் – நோபல்

கலை – பிரபாகர்.எம்

ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர்

தயாரிப்பு – ஜான்மேக்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எம்.ஜீவன்

படம் பற்றி தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் சொல்லும்போது,. “இந்த படம் ‘மைனா’ படத்தை போன்றே வித்தியாசமான கதைக் களத்தைப் உள்ளடக்கியது. நிஜ சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. இதில் மனதை உருக்கும் காதலும் இருக்கும், மனதை இரும்பாக்கும் ஆக்சனும் இருக்கும்.

‘மைனா’ படத்தில் பஸ் ஆக்சிடென்ட் காட்சி எப்படி பரபரப்பாக பேசப்பட்டதோ அதே மாதிரி இந்தப் படத்திலும் குழந்தைகளுடன் செல்லும் ஜீப் ஒன்று, விபத்தில் சிக்குவது மாதிரியான காட்சியை படமாக்கியுள்ளோம். இதை கேரளாவில் படமாக்கினோம்.

இந்தப் படத்திற்காக பிரமாண்டமான அரண்மனை ஒன்றில் பதினைந்து நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். பாடல்களும், படமும் நிச்சயம் ‘மைனா’, ‘சாட்டை’ மாதிரியே பாராட்டும், வெற்றியும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மூன்று பெரிய நடிகர்களை வைத்து பிரமாண்டமாக புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளோம். நடிகர்களை ஒப்பந்தம் செய்துவிட்டோம். ஷாலோம் ஸ்டுடியோஸ் மற்றும் சென்ட்சுரி இண்டர்நேஷனல் என இரண்டு நிறுவனங்களும் இணைந்து அந்தப் படங்களை தயாரிக்கிறோம். அது பற்றி அறிவிப்பு விரைவில் வரும்..” என்றார்.

Our Score