இரட்டையர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகும் ‘குருசுக்ரன்’ திரைப்படம்..!

இரட்டையர்கள் ஹீரோக்களாக அறிமுகமாகும் ‘குருசுக்ரன்’ திரைப்படம்..!

‘குருகமலம் அசோசியேட்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘குரு சுக்ரன்.’

இந்த படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ‘ஆடுகளம்’ நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ, ‘அவன் இவன்’ ராமராஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – செல்லத்துரை

இசை – சந்தோஷ் சந்திரபோஸ்

பாடல்கள் – வைரமுத்து

கலை – ஜான்பிரீட்டோ

நடனம் – ரமேஷ்ரெட்டி

ஸ்டண்ட் – மிரட்டல் செல்வா

தயாரிப்பு – குமுதவள்ளி ராஜேந்திரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் B.ஆனந்த்.

படம் பற்றி இயக்குனர் ஆனந்திடம் கேட்டோம்….

“இந்த படத்தில் ஹீரோக்களான குரு, கமல்நாத் இருவருமே அறிமுக நடிகர்கள். அதைவிட டிவிஸ்ட்டான விஷயம் இவர்கள் இருவருமே ட்வின்ஸ் என்பதுதான்.

சமீபத்தில் ஒரு ஹீரோவான குரு, படத்தின் வில்லன் அருள்மணியுடன் மோதும் ஒரு சண்டை காட்சி மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான அரங்கில் படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சி 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் படமாக்கப்பட்டது. சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டண்ட் காட்சியில் பங்கு பெற்றது ஆச்சர்யமான விஷயம். இதன் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..” என்றார் ஆனந்த்.

Our Score