“தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்.

“தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” – அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்.

“வரும் அக்டோபர் 15-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் திரையரங்குகளைத் திறக்கலாம்” என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கூடவே, இது தொடர்பாக திரையரங்குகளும், மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டிய நோய்த் தடுப்பு நடவடிக்கை குறிப்புகளையும் மத்திய அரசு நேற்றைக்கு வெளியிட்டுள்ளது.

இருந்தாலும் இதுவரையிலும் தமிழக அரசு தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

இது குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம், “தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும்..?” என்று பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.

?????????????????????????????????????????????????????????

அதற்கு அவர் பதிலளித்தபோது, "திரையரங்குகள் என்பது திரைத்துறையில் ஒரு அங்கம்தான் கொரோனா பாதிப்பு பிறகு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதால் பல்வேறு தளர்வுகள் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

திரைத்துறையின் நல வாரிய அமைப்புகள் மூலம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு 2000 ரூபாய் நிவாரணம் வழங்கியிருக்கிறோம். கொரோனா பாதிப்பு இப்போதுதான் கட்டுக்குள் வந்திருக்கிறது. இந்த நேரத்தில், சினிமா ரசிகர்கள் 3 மணி நேரம் ஒரே அரங்கில் இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி,  மத்திய மற்றும் மாநில சுகாதார குழுவுடன் ஆலோசித்து அதன் பிறகு முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்திய பிறகு திரையரங்கள் திறப்பது குறித்து நல்ல முடிவு  அறிவிக்கப்படும்…." என தெரிவித்தார்.