full screen background image

23 வருடங்களுக்கு பிறகு பவானி கோனேரிப்பட்டி பாலத்தில் படப்பிடிப்பு..!

23 வருடங்களுக்கு பிறகு பவானி கோனேரிப்பட்டி பாலத்தில் படப்பிடிப்பு..!

‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’ ஆகிய படங்களை தனது வி ஹவுஸ் புரொடெக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, ’மிக மிக அவசரம்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

suresh kamatchi

படத்தில் கதாநாயகனாக ‘கோரிப்பாளையம்’ ஹரிஷ், கதாநாயகியாக ‘கங்காரு’, ‘வந்தா மல’ ஹீரோயினான ஸ்ரீஜா நடிக்கிறார். மற்றும் ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சேதுபதி’ படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக நடித்த லிங்கா, ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், இயக்குநர் சரவண சக்தி, வீ.கே.சுந்தர்,வெற்றி குமரன் ஆகியோர் நடிக்கிறார்கள். மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமானும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு பாலபரணி. எடிட்டிங் சுதர்சன். இந்த படம் மூலம் ‘கங்காரு’, ‘அமைதிப்படை-2’ படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகிறார். தயாரிப்பு வி ஹவுஸ் புரொடெக்‌ஷன்ஸ்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ள கோனேரிப்பட்டி பாலத்தில் நடைபெற்றுவருகிறது.   சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு   ‘பவுனு பவுனுதான்’ படத்தின் படப்பிடிப்பு இங்கு நடந்தது. பாக்யராஜும், ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி இங்குதான் படமாக்கப்பட்டது.

bsp_9576 

‘மிக மிக அவசரம்’ படத்தில் இந்த கோனேரிப்பட்டி பாலம் முக்கிய இடம் பிடித்துள்ளதால், 23 ஆண்டுகளுக்கு பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள். 

நீண்ட காலத்திற்கு பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். இங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்ட ‘பவுனு பவுனு’தான் படம் போலவே இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று வாழ்த்தியுள்ளனர்.

மேலும் ஒரு முக்கிய அம்சமாக இந்த படத்தின் படப்பிடிப்பில் ‘EPIC WEAPON HELIUM 8-K CENSOR’ என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுகிறது. இது ‘8-K Resolution அடங்கிய கேமரா ஆகும். இதன் மூலம் காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடிக்கலாம். இந்த கேமரா இந்தியாவிலேயே முதன்முறையாக ’மிக மிக அவசரம்’ படத்தில்தான் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Our Score