full screen background image

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’

விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மைக்கேல்’

விஜய் சேதுபதிக்கு மட்டும் நேரம் எங்கேயிருந்துதான் கிடைக்கிறது என்று தெரியவில்லை. கை விரல்கள், கால் விரல்களை சேர்த்து எண்ணினால்கூட தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும், நடிக்கப் போகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

தற்போது புதிதாக ஒரு திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம் விஜய் சேதுபதி. இந்தப் புதிய படத்தின் பெயர் மைக்கேல்’.

ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி. மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி. ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பரத் சௌத்ரி மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

‘புரியாத புதிர்’, ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ மற்றும் விரைவில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ‘யாருக்கும் அஞ்சேல்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடிக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்திய திரைப்படமாக இது உருவாகிறது.

இதில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுமாம்.

இந்த நிறுவனம் தற்போது இயக்குநர் சேகர் கம்முலா மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில், தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் தயாராகும் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score