இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும், வித்யா பிரேம் தயாரிப்பில், வந்தை பிரேம் எழுதி, இயக்கும் ‘மறுஜென்மம் காதல்’ படம் இன்று துவங்கியது.
படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V.கணேஷ் பாபு மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, வாழ்த்தினார்கள்!
பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டை மற்றும் உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதே இந்த ‘மறுஜென்ம காதல்’ படத்தின் கதை!
இந்தப் படத்தில் வந்தை பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார்.
இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி வந்தை பிரேம் இயக்குகிறார். கிரியேட்டிவ் இயக்குநர் – K.S.விஜயபாலன், ஒளிப்பதிவு – வி.சத்யகண்ணன், இசை – சார்லஸ் தனா, எடிட்டிங் – லெனின், நடனம் – ஜோசப் கென்னடி, சண்டைப் பயிற்சி – கிளாசிக் பாபு, கலை – ராஜா கண்ணதாசன், பத்திரிக்கை தொடர்பு – கோவிந்தராஜ், தயாரிப்பு நிர்வாகம் – கே.ராமலிங்கம், தயாரிப்பு – வித்யா பிரேம்.









