full screen background image

மேடையில் ஆபாசமாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்ட பில்டப் ஆசாமி..!

மேடையில் ஆபாசமாகப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்ட பில்டப் ஆசாமி..!

வீட்டில் சும்மா இருக்கும் நடிகர்களுக்கு மைக் கிடைத்தால் போதும்.. ஊர்க் கதை, உலகக் கதையையெல்லாம் பேசுவார்கள். எந்த விழாவுக்கு, எதற்காக வந்திருக்கிறோம் என்பதைக் கூட மறந்துவிட்டு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள். 

அப்படி நேற்றைக்கு பிரசாத் லேப்பில் நடைபெற்ற ‘தொடாதே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விழாவில் பேசிய நடிகர் என்று சொல்லிக் கொள்ளும் ‘கூல்’ சுரேஷ் என்பவர் தன்னுடைய பேச்சில் ஆபாச வார்த்தைகளை பேசிவிட… பத்திரிகையாளர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டிய பின்பு மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடினார்.

இந்த விழாவில் நடிகர் ‘கூல்’ சுரேஷ் பேசுகையில், “காதல்’ சுகுமாரை எனக்கு சுமார் 25 ஆண்டு காலமாக தெரியும். அப்போதே அவர் எனக்கு நடிப்பில் பல டிப்ஸ்களை கொடுப்பார். எப்படி பேச வேண்டும், இந்த காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என்று ஐடியா கொடுப்பார், அப்போதே நான் அவர் பின்னாடி ஒளி வட்டம் தெரிவதை உணர்ந்தேன். அவர் உள்ளே ஒரு இயக்குநர் இருப்பதையும் உணர்ந்தேன். அதனால்தான் படங்களையும் இயக்கியுள்ளார். நிச்சயம் இந்த படம் மூலம் மக்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள், அதனால் படமும் நல்ல வெற்றியை பெற வேண்டும்.” என்று பேசிய்வர், திடீரென்று மேடையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கியதால், பத்திரிகையாளர்கள் பலரும் கோபமடைந்து கூல் சுரேஷை எச்சரித்தனர்.

உடனே தனது தவறை உணர்ந்த நடிகர் கூல் சுரேஷ், “நான் இப்படி பேசினால் ரசிகர்கள் ரசிக்கிறார்கள், என்று பேசினேன் ஆனால், இனி இப்படி பேச மாட்டேன்…” என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

இது முதல் முறையல்ல.. சில நாட்களுக்கு முன்பாக நடந்த ஒரு விழாவிலும் இதேபோல் ஆபாச வார்த்தைகளை சகட்டுமேனிக்கு பேசிவிட்டு சென்றார் இந்த நபர். 

நேற்றைக்கு நடந்த விழாவில்கூட “எனது ரசிகர்களுக்குப் பிடிக்குமே என்றுதான் அப்படிப் பேசினேன்” என்று தைரியமாக மேடையிலேயே சொன்னார். வடபழனியைத் தாண்டினால் இவரையே யாருக்குமே தெரியாது. இதில் இவரது ரசிகர்கள் இவரது பேச்சை எதிர்பார்க்கிறார்களாம்…! அதிலும் ஆபாச வார்த்தைகள்தான் அந்த ரசிகர்களுக்குப் பிடிக்குமாம்.. ரசிகர்களே அப்படியென்றால் இவர் எப்படியிருப்பார்..? கொடுமைடா சாமி..! 

தமிழ்ச் சினிமாவில் இவரைப் போல பலரும் இப்படி பில்டப் ஆசாமிகளாகத்தான் இருக்கிறார்கள்..!

Our Score