வி.ஐ.பி. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விக்டர் இம்மானுவேல் தயாரித்துள்ள திரைப்படம் ‘மரபு’.
இந்தப் படத்தில் தயாரிப்பாளரான விக்டரே நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக ‘டிக் டாக்’ பிரபலம் இலக்கியா நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் கருத்தம்மா ராஜ நடித்துள்ளார்.
தயாரிப்பாளரும், ஹீரோவுமான விக்டர் இம்மானுவேலே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கமும் செய்துள்ளார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் விக்டர் இம்மானுவேல் பேசுகையில், “தனது மரபு சார் பண்புகளை மறந்து வாழ்வில் அற்ப விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்தான் இந்த ‘மரபு’ திரைப்படம்.
எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபினை மையப்படுத்திதான் இந்த “மரபு” படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் அனுபவமுள்ள தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது…” என்றார்.