full screen background image

“இப்போதைய சினிமா பாடல்களில் தரமே இல்லை..” – வருத்தப்படுகிறார் மணிரத்னம்..!

“இப்போதைய சினிமா பாடல்களில் தரமே இல்லை..” – வருத்தப்படுகிறார் மணிரத்னம்..!

கோவையில் நடைபெற்ற ‘கவிஞர்கள் திருவிழா’ நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னமும் கலந்து கொண்டு வைரமுத்துவை பாராட்டியிருக்கிறார்.

அப்போது, “இப்போது வருகின்ற பாடல்களில் தரமே இல்லை..” என்று சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் மணிரத்னம்.

மணிரத்னம் தன்னுடைய பேச்சில், “இதயக்கோவில்’ படத்தில் இடம் பெற்ற வைரமுத்துவின் ‘நான் பாடும் மெளனராகம் கேட்டதில்லையா’ன்ற பாட்டுல இருந்துதான் எனக்கு ‘மெளனராகம்’ அப்படீங்கற டைட்டிலே கிடைச்சது. அதுக்கு அப்புறம் ‘ரோஜா’வுலதான் நாங்க முதன் முதலா சேர்ந்து வேலை பாத்தோம்.

இங்கே வைரமுத்துவை நான் வாழ்த்த வரலை. அவர்கிட்ட வேண்டிக்கத்தான் வந்திருக்கேன். இப்போது வருகிற தமிழ் சினிமா பாடல்களெல்லாம் தரமில்லாமல் உள்ளன. முன்பெல்லாம் சினிமா பாடல்கள்தான் படத்தைத் தூக்கி நிறுத்தும். ஆனால் இப்போது அது போன்ற நிலைமையில்லை.

‘ரோஜா’ படத்தில் அவர் எழுதிய ‘சின்ன சின்ன ஆசை’ என்ற பாடல் பெரும் புகழ் பெற்றது. இப்போ தமிழ் சினிமாவுல இருக்கற பாடலாசிரியர்கள்ல அவரோட பாதிப்பு இல்லாத பாடலாசிரியர்களே இல்லைன்னு சொல்லலாம். இது மட்டும் போதாது. சினிமா பாடல்களுக்கும், கவிதைகளுக்கும் உள்ள இடைவெளியை வைரமுத்துதான் குறைக்க வேண்டும்..” என்று பேசியிருக்கிறார்.

லட்டு மாதிரியான பாடல்களை கொடுத்த இளையராஜாவை அலட்சியமா தூக்கிப் போட்டு போயிட்டு இப்போ தரமில்லை.. தரமில்லைன்னு சொல்லி புலம்பினா என்ன அர்த்தம்..? தப்பு யார் மேல..? ரஹ்மான் மேலயா..? இப்பவும் கூட இருந்து எழுதிக்கிட்டிருக்குற வைரமுத்து மேலயா..?

Our Score