full screen background image

“குரங்கு மாதிரி சோதனையில் பலியாகவும் தயார்..” – இயக்குநர் சேரனின் நெஞ்சுறுதி..!

“குரங்கு மாதிரி சோதனையில் பலியாகவும் தயார்..” – இயக்குநர் சேரனின் நெஞ்சுறுதி..!

சேரனின் C2H நெர்வொர்க் நிறுவன அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் அமீர், “குரங்கு மாதிரி சேரனை பலி கொடுக்குறீங்களா..?” என்று கேட்டதாகச் சொன்னார்..

அமீர் தன்னுடைய பேச்சில், “இன்னிக்கு காலைல ரெண்டு, மூணு பேர் போன் செஞ்சாங்க.. இந்த விழாவுக்கு வரலாமா வேண்டாமா… அப்படி வந்தா ரெட் கார்டு போட்டிருவாங்களான்னு கேட்டாங்க.  பயப்படாம வாங்கன்னு சொன்னேன்.. சினிமாவுலக நிலைமை இப்படியிருக்கு..!

இன்னிக்குத்தான் பெப்ஸியோட பொதுக்குழு கூட்டம் நடந்துச்சு.. அடுத்த தேர்தலுக்கான நாளை அறிவிச்சிட்டுத்தான் இங்க வந்திருக்கேன். இங்க ஒண்ணு சொல்லிக்கிறேன். இன்னும் ஆறு மாசத்துல பெப்ஸியோட பேரு பெப்டாவா மாறிரும்.. அதுக்கான வேலைகள் மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு..!

இப்போ சினிமா இண்டஸ்ட்ரீல தியேட்டர் கிடைக்குற படங்களைவிடவும், தியேட்டர் கிடைக்காத படங்கள்தான் அதிகமா இருக்கு..  இந்த படங்களையெல்லாம் மக்கள் முன்னாடி கொண்டு போய் சேர்க்குறது யாருன்னு இப்போவரைக்கும் தெரியலை.. இப்போ நம்ம சேரன் இந்தப் பொறுப்பை எடுத்திருக்காரு..

ஆறு மாசத்துக்கு முன்னாடி சேரன் என்னைக் கூப்பிட்டு இந்த மாதிரி ஒரு விஷயத்தைப் பண்ணப் போறேன்னு சொன்னார். அப்போ அவர்கூட அவர் நிறுவனத்தோட தொழில்நுட்ப ஆட்களும் இருந்தாங்க. அவங்க சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்ட பின்னாடி நான் என்ன சொன்னேன்னா..

‘புதுப்புது மருந்துகளை அறிமுகப்படுத்தும்போது அதை முதல்ல குரங்குகளுக்கு கொடுத்துதான் டெஸ்ட் பண்ணுவாங்க. அது மாதிரி இந்த திருட்டு டிவிடி ஒழிக்கிற விஷயத்துல நீங்க பயன்படுத்துற குரங்கு சேரன்தான்னு முடிவு பண்ணிட்டீங்களா?’ன்னு கேட்டேன்..

அதுக்கு அவங்க சொன்ன பதிலைவிட சேரன் சொன்ன வார்த்தைதான் அருமையா இருந்துச்சு. ‘அப்படி என்னை பலி கொடுத்துதான் இந்த டெக்னாலஜி வளரணும்னா அதுக்கு நான் தயாரா இருக்கேன்’னாரு. இதுதான் சேரன்.. சேரன் எந்தளவுக்கு சினிமாவை நேசிக்கிறாருங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்..

அவருக்குப் பின்னாடி அவருடைய டீம் மட்டுமில்ல.. ஒட்டு மொத்த தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீயே இருக்கு.. அவருடைய எல்லாவிதமான முயற்சிகளுக்கும் பெப்ஸி என்றென்றும் துணை நிற்கும்…” என்றார் அமீர்.

Our Score