full screen background image

‘ராட்டினம்’ லகுபரனின் ‘மனம் மயங்குதே’..!

‘ராட்டினம்’ லகுபரனின் ‘மனம் மயங்குதே’..!

கருமாரி வழங்கும் P.K.முத்துகுமார்,V.செந்தில்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மனம் மயங்குதே’.

‘ராட்டினம்’ லகுபரன், புதுமுகம் ரியா, ரோபோசங்கர், இயக்குநர் மனோஜ்குமார், வினோத், முத்துகாளை, நெல்லை சிவா, எலிசபத், ஜானகி, முருகன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

N.S.ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஷியாம்மோகன், பவன் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். P. சாய்சுரேஷ் அவர்களின் மேற்பார்வையில் R.G.ஆனந்த் படத் தொகுப்பு செய்ய, கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார் K.V.ராஜீவ்.

இயக்குநர் ராஜீவ் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லையாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞராக பல படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். இது இவரது முதல் படம்.

ஹீரோ ஒரு கூரியர் கம்பெனியில் வேலை செய்கிறார். வழக்கம்போல அவருக்குள்ளும் ஒரு காதல் பிறக்கிறது. அந்த நேரத்தில் தாய்க்கு மருத்துவம் செய்ய பணம் இல்லாததால் தாயை இழக்கிறார். உயிருக்கு உயிராய் காதலித்த காதலியையும் பணத்தை காரணம் காட்டி அவரிடமிருந்து பிரித்து விடுகிறார்கள்.

வாழ்க்கையில் எல்லாமே பணம்தான் என்பதை புரிந்து கொண்ட ஹீரோ அந்த பணத்தை எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என முடிவு செய்து தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்கிறார். அதன்படி பணத்தை சம்பாதிக்க முடிந்ததா..? காதலியுடன் சேர்ந்தாரா… என்பதுதான் இந்தப் படத்தின் கதையாம்.

படத்தின் ஹீரோயின் ரியா நிஜத்தில் பிஎஸ்சி ஸ்டூடண்ட். ஆனால் படத்தில் பிளஸ்டூ ஸ்டூடண்ட்டாக நடித்திருக்கிறாராம்.

ஹீரோ லகுபரனுக்கு ஒரு ராசி உண்டு. அவருடன் ஜோடி சேரும் நடிகைகளுக்கு உடனேயே கல்யாணம் ஆகிவிடும்.. இந்த ரியாவுக்கும் அந்த அதிர்ஷ்டம் உண்டான்னு தெரியலை..!?

Our Score