full screen background image

அழுச்சாட்டியம் – திரை முன்னோட்டம்

அழுச்சாட்டியம் – திரை முன்னோட்டம்

நிசா பிக்சர்ஸ் சார்பில் E.விஜயகுமார் தயாரித்து, கதை, வசனம் எழுதி இருக்கும் படம் ‘அழுச்சாட்டியம்.’

இந்த படத்தில் புதுமுகம் ரகு கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ரம்யா நரசிம்மன் நடித்திருக்கிறார். மற்றும் மீசை ராஜேந்திரநாத், தவசி, போண்டாமணி, பெஞ்சமின், கிங்காங், கோவை செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  V.T.ராஜா

இசை  –   நித்யன் கார்த்திக்

எடிட்டிங்   – பாசில்

கலை   –   மணி கார்த்திக்

நடனம்  –  ராமகிருஷ்ணன்

பாடல்கள்   –  ராஜ்கவி, ரவிச்சந்திரன்

தயாரிப்பு மேற்பார்வை  –  முத்.அம்.சிவகுமார்

திரைக்கதை  எழுதி இயக்குகிறார் பிரேம்குமார்.

தயாரிப்பு  –  E.விஜயகுமார்.

படம் பற்றி இயக்குனர் பிரேம்குமாரிடம் கேட்டோம்….

“எல்லா வசதிகளும் தங்களிடம் இருக்கிறது என்கின்ற அலட்சியம்தான் இளைஞர்களை தவறான பாதைகளில் செல்ல வழி வகுக்கிறது. மேற்கொண்டு தங்களது தேவைகளுக்காக அவர்கள் பொறுக்கித்தனமான வேளைகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு குணாதிசயம் கொண்ட படத்தின் நாயகன் –  நாயகியை காதலித்து திருமணம் செய்கிறான்.

அதற்கடுத்து நாயகன் செய்த தவறால் தம்பதிகள் இருவரும் பிரிகிறார்கள். ஹீரோ தான் செய்து வந்த ரவுடித்தனமான, பொறுக்கித்தனமான செய்கைகளில் இருந்து மீண்டு வந்தானா? நாயகன், நாயகி இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா.. இல்லையா என்பதுதான் திரைக்கதை…!

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த படமாக இந்த ‘அழுச்சாட்டியம்’ உருவாகியுள்ளது. படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார். 

Our Score