நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ பரிசு..!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லாலுக்கு ‘கோல்டன் விசா’ பரிசு..!

மலையாளத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் இருவருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் சார்பில் சினிமா உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், முக்கிய தொழிலதிபர்களுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விசா 10 வருடங்கள் செல்லுபடியாகும்.

இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உள்ளிட்ட பல இந்திய பிரமுகர்களுக்கு ஏற்கெனவே இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மலையாள திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் இருவருக்கும் இந்த கோல்டன் விசாவை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

மோகன்லால், மம்மூட்டி இருவருமே துபாயில் சொந்தமாக வீடுகளை வைத்துள்ளனர். புகழ் பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மோகன்லால் ஒரு வீடு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோல்டன் விசாவைப் பெறுவதற்காக மம்மூட்டியும், மோகன்லாலும் துபாய்க்கு சென்றுள்ளனர்.

 
Our Score