full screen background image

‘சூரரைப் போற்று’ படத்திற்கு விருதுகளை வாங்கிக் குவிக்கும் சூர்யா..!

‘சூரரைப் போற்று’ படத்திற்கு விருதுகளை வாங்கிக் குவிக்கும் சூர்யா..!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று.’

ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்கிற பெருமை இந்த படத்திற்குத்தான் கிடைத்தது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கார் போட்டிக்குத் தேர்வாகி சாதனை படைத்தது இந்த சூரரைப் போற்று’ திரைப்படம். மேலும், IMDB-யில் அதிக மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதும் ஆச்சரியமானதாகும்.

இப்போது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படமும், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் பெற்றுள்ளனர். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Our Score