full screen background image

ம.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘அட்டி’..!

ம.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘அட்டி’..!

‘E-5 ENTERTAINMENT IND PVT LTD’ சார்பில் ‘அரிது அரிது’, ‘ஈசா’ ஆகிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார். இந்த முறை ‘IMAGINARY MISSIONS’ நிறுவனத்தின் கார்த்திகேயனுடன் கை கோர்த்து தனது புதிய தமிழ்ப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு ‘அட்டி’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் ம.கா.பா. ஆனந்த் ஹீரோவாக நடிக்கிறார். அஷ்மிதா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ராம்கி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறாராம். ‘மெய்யழகி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வெங்கடேஷ் அர்ஜூன் இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜேஷ் எடிட்டிங் செய்கிறார். இவர் இதற்கு முன்பு ‘வேலையில்லா பட்டதாரி’, ‘சலீம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பு செய்துள்ளார்.

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நாடோடிகள்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தர் சி.பாபு இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். சினேகன், அண்ணாமலை, விஜயசேகர், கவிவர்மன், கானா வினோத் ஆகியோர் பாடல்களை எழுதவுள்ளனர். பவர் பாண்டியன் சண்டை பயிற்சியை மேற்கொள்கிறார்.

எழுதி, இயக்கவுள்ளார் புதுமுக இயக்குநர் விஜயபாஸ்கர். இவர் ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ்பாண்டியன்’ ஆகிய படங்களில் இயக்குநர் சுராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படம் பற்றி பேசிய இயக்குநர், “சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாட்டர் சப்ளை செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோ மற்றும் அவரது நண்பர்கள் பற்றிய கதை இது. சந்தோஷமாக பிஸினஸ் செய்து கொண்டிருக்கும் கதாநாயகனுக்கு ஒரு நாளில் திடீரென்று ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. அந்தப் பிரச்சினையை அவர் எப்படி சாதூர்யமாக சமாளித்து ஜெயிக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து கமர்ஷியல் படமாக.. பொழுது போக்கும் அம்சமுள்ள படமாக எடுக்கவிருக்கிறோம்..” என்றார்.

Our Score