full screen background image

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ‘அட்டி’ திரைப்படம்

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் ‘அட்டி’ திரைப்படம்

E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ்  தயாரித்திருக்கும் புதிய படம் அட்டி.

‘வானவராயன் வல்லவராயன்’ படத்திற்கு பின்பு மா.கா.பா.ஆனந்த் தனி ஹீரோவாக நடிக்கும் முதல் படம் இது. சென்னையை மையமாக கொண்ட இக்கதைக் களத்திற்கேற்ப தன்னை உருமாற்றிக் கொண்டு கதையின் நாயகனாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக  அஷ்மிதா நடித்துள்ளார். கதைக்கு ஏற்ற அறிமுகம். மிகவும் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்த ‘அட்டி’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராம்கி நடித்துள்ளார். இவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம் இது. இதில் மீசை இல்லாமல் அழகான தோற்றத்துடன் வருகிறார் ராம்கி.

இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், ‘மகாநதி’ சங்கர், யோகி பாபு, கலை, மிப்பு, தங்கதுரைஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன். இவர் ஏற்கெனவே ‘மெய்யழகி’ திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இசையமைப்பாளரான சுந்தர்.சி.பாபு, ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘நாடோடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இசையமைத்ததோடு இல்லாமல் இந்தப் படத்தை தனது பரிநிதா புரொடெக்ஷன்ஸ் சார்பில் வாங்கி விநியோகமும் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத் தொகுப்பு : M.V.ராஜேஷ் குமார். இவர் ஏற்கெனவே ‘வேலையில்லா பட்டதாரி’, ‘சலிம்’ ஆகிய வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். ‘அட்டி’ திரைப்படமும் இவ்வெற்றியின் வரிசையில் வரும் வகையில் படத் தொகுப்பை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார்.

‘பவர்’ பாண்டியன் மாஸ்டர் சண்டை பயிற்சியை அமைத்துள்ளார். திரைப்படத்தின் அனைத்து சண்டை காட்சிகளையும் மிகவும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளார்.

பாடல்களை சினேகன், கானா வினோத், கவிவர்மன்,  மற்றும் விஜய சாகர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

முன்னனி நடன இயக்குநரான ராபர்ட் மாஸ்டரின் ஆஸ்தான உதவியாளரான சுரேஷ் இந்த ‘அட்டி’ திரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராகிறார்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுராஜிடம் ‘மாப்பிள்ளை’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.

சென்னையின் மையப் பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக் களமே ‘அட்டி’.

இதில்  கதாநாயகன் கானா  பாடகராகவும், அஜித் ரசிகராகவும் நடித்துள்ளார். கதாநாயகன் தன்னை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தன் நண்பர்கள் உதவியோடு எப்படி கையாளுகிறார் என்பதே கதைக் கருவாம்.

Our Score