காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.ஜி.காளையப்பன் தயாரிக்கும் படம் ‘மதுரை மணிக்குறவன்.’
இந்தப் படத்தில் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடிக்கும் ஹரிகுமார், இந்த படத்திற்காக சில பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். தோற்றத்திலும் உடல் வாகு, மற்றும் நடை, உடை பாவனையிலும் வித்தியாசத்தை காட்டி நடித்து வருகிறார்.
கதாநாயகியாக மாதவி லதா நடித்திருக்கிறார். ரிஷிதா, பவித்ரா ஆகியோரும் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மற்றும் சரவணன், சுமன், கே.ஜி.காளையப்பன், சுஜாதா, அனுமோகன், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், போண்டாமணி, முத்துக்காளை, ஐவரி.கே.சண்முகம் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆர்.கே.பிரதாப், இசை -இளையராஜா, கலை -முருகன், எடிட்டிங் – வி.டி.விஜயன், ஸ்டண்ட் – ஜாக்குவார் தங்கம், வசனம் – வெற்றி, தயாரிப்பு மேற்பார்வை – போடி விஜயகுமார், எழுத்து, இயக்கம் – ராஜரிஷி, தயாரிப்பு -கே.ஜி.காளையப்பன்.
படம் பற்றி இயக்குநர் ராஜரிஷி பேசும்போது, “அந்தந்த பகுதிகளில் மக்களின் பிரச்சனைகளுக்கு போராடி வட்டார மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ‘மலையூர் மம்பட்டியான்’, ‘சீவலப்பேரி பாண்டி’, போன்று ‘மதுரை மணிக்குரவனும்’ ஒருவன்.
இந்த மண் சார்ந்த மனிதனின் வாழ்க்கைக்கு இசைஞானி இளையராஜாவின் இசைதான் பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என்று நினைத்து அவரை அணுகினோம். அவரும் கதையை கேட்டு ‘இந்த அற்புதமான கதைக்கு என் இசையால் உயிரூட்டுகிறேன்’ என்று சொல்லி அருமையாக டியூன்களை போட்டுக் கொடுத்திருக்கிறார். அது எங்கள் யூனிட்டுக்கு கிடைத்த முதல் வெற்றி..” என்றார்.









