full screen background image

‘மாவீரன் பிள்ளை’ படத்தில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி

‘மாவீரன் பிள்ளை’ படத்தில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி

KNR Movies சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை’. 

இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சந்தனக் கடத்தல்’ வீரப்பனின் இரண்டாவது மகளான விஜயலட்சுமி நடித்துள்ளார். மேலும், நடிகர் ராதாரவியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இசை – ரவி வர்மா,  ஒளிப்பதிவு – மஞ்சுநாத்,  படத் தொகுப்பு – ஜூலின். பாடல்கள் எழுதி பாடியுள்ளார் ஆலயமணி.

இந்தப் படத்தில் பெண்களுக்கு தற்காப்பு கலையைக் கற்றுத் தரும் ஒரு ஆசிரியர் கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும் மது ஒழிப்புக்கு எதிரான போராட்டங்களை பற்றிய படம் இது என்பதால்… இப்படத்தில் நடிக்க முன் வந்தேன்…” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டம்  அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் டெல்லியிலும் நடைபெற்றது. 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

Our Score