full screen background image

மாஸ் போஸ்டர் காப்பியில்லை – வெங்கட்பிரபு விளக்கம்..!

மாஸ் போஸ்டர் காப்பியில்லை – வெங்கட்பிரபு விளக்கம்..!

கடந்த தீபாவளி தினத்தன்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

தமிழ்ச் சினிமாவுலகத்தின் அகராதிப்படி போஸ்டரின் ஆழ, அகல, உயர, உண்மைத்தன்மைகளை உடனடியாக அலசிய அறிஞர் பெருமக்கள், இந்த போஸ்டர் ‘Bourne Ultimatum’ என்ற ஆங்கிலப் படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று கமெண்ட் அடித்திருந்தார்கள்.

இது பற்றிய செய்தியை நாமும் இத்தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இப்போது இது பற்றிய சந்தேகங்களுக்கு பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.

வெங்கட்பிரபு தனது பதிலில், “மாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தீபாவளி அன்று வெளியிட்டோம். அந்தப் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டது மட்டுமன்றி, ட்ரெண்ட்டும் ஆனது.

ஆனால், ஒரு தரப்பினர் மட்டும் இந்தப் போஸ்டர் பிரபலமான ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

venkatprabhu-maass-copy

‘போஸ்டர் காப்பி’ என்று கூறுபவர்களுக்கு ஒரு விஷயத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். அப்படத்தின் போஸ்டர் ‘மக்‌ஷாட் (MUGSHOT) என்ற தொழில் நுட்பம் மூலம் உருவாக்கியது. அதன் மூலம் பல ஹாலிவுட் படங்களின் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் அனைத்து புகைப்படங்களும் ஒன்று போலவே இருக்கும் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும். ஆகவே, தமிழ் சினிமா ரசிகர்கள் காப்பி என்று கூறுவது தவறு என்று உறுதியாகச் சொல்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்.

நல்லதுங்கோ.. நாமளும் இந்த விளக்கத்தை பரப்புரை செய்றோமுங்க..!

Our Score