full screen background image

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம் – நடிகை விஜயகுமாரி அஞ்சலி..!

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம் – நடிகை விஜயகுமாரி அஞ்சலி..!

உடல்நலக்குறைவால் இன்று காலை காலமான ‘இலட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உடல் இன்று மாலை 6 மணியளவில் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

s-s-rajendan-

முன்னதாக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ssr-3

முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இரண்டாவது மாடியில் எஸ்.எஸ்.ஆரின். உடல் வைக்கப்பட்டிருந்ததால் அவருடைய உடலை செல்போனில் படம் பிடித்து கலைஞரிடம் காட்டினார்கள். அதனைப் பார்த்து கண் கலங்கினார் கலைஞர். பின்பு கலைஞர் தொட்டு கொடுத்த மாலையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்.முத்துராமலிங்கம் எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் எஸ்.எஸ்.ஆரின் உடலுக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் பொன்முடி, டி.கே.எஸ். இளங்கோவன், செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன், பா.ஜ.க, சார்பில் தமிழிசை செளந்திரராஜன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

திரைத்துறை சார்பில் பிரபு, பாக்யராஜ், கேயார், விஜயகாந்த், முக்தா சீனிவாசன், சச்சு, ஒய்.ஜி.மகேந்திரன், சிவக்குமார், ராஜசேகர், வைரமுத்து, சரத்குமார், ராதாரவி, ராதிகா, விஜயகுமார், மனோரமா, பெப்சி சிவா, ஏ.எல்.அழகப்பன், கே.ராஜன், உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

vijayakumari-ssr-5

வர மாட்டார் என்று அனைவரும் நினைத்திருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரனின் இரண்டாவது மனைவியான நடிகை விஜயகுமாரி தனது மகனுடன் நேரில் வந்து எஸ்.எஸ்.ஆரின் உடலை பார்த்து கதறி அழுதார்.

vijayakumari-ssr-1

இருவரும் பிரிந்து சென்ற பின்பு எஸ்.எஸ்.ஆருடன் பேசாமல் இத்தனை ஆண்டுகள் தனித்து தனது மகனுடன் வாழ்ந்து வந்த விஜயகுமாரி பொது இடங்களில்கூட எஸ்.எஸ்.ஆரை சந்திப்பதை தவிர்த்து வந்தார். ஆனால் இன்றைக்கு விஜயகுமாரி வந்திருந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

vijayakumari-ssr-4

பின்னர் எஸ்.எஸ்.ஆரின் உடல், எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசன்ட் நகர் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது 6 மகன்களும் இணைந்து இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் இறுதியாக அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

புகைப்பட உதவிக்கு நன்றி : விகடன்.காம்

Our Score