“என்கிட்ட யாரும் ஐ லவ் யூ சொன்னதே இல்லை..” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..!

“என்கிட்ட யாரும் ஐ லவ் யூ சொன்னதே இல்லை..” – நடிகை ஸ்ருதிஹாசனின் பதில்..!

அதிகக் கவர்ச்சி காட்டி நடிக்கிறார். தமிழில் அதிகம் நடிப்பதில்லை.. பட்பட்டென்று பலூனை உடைத்தாற்போல் பேசுகிறார் என்று நடிகை ஸ்ருதிஹாசன் மீது வண்டி வண்டியாக புகார்கள்..!

சமீபத்திய பேட்டியொன்றில் இவை அனைத்திற்கும் மிக இயல்பாக.. இதுதான் நான் என்பது போல பதில் சொல்லியிருக்கிறார் ஸ்ருதி..!

“நான் எல்லா படங்களையும் இந்திய படங்களாகவே பார்க்கிறேன். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறேன். ஏழு படங்கள் கைவசம் இருக்கின்றன. மற்ற மொழிகளிலும் நடிப்பதால்தான் தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால்தான் அதிகம் தமிழில் நடிக்க முடியவில்லை..” என்கிறார் ஸ்ருதி.

“கவர்ச்சியை வாரி வழங்குகிறீர்களே…?” என்றால், “முதலில் நான் ஒரு நடிகை. கதைக்குத் தேவையானபடி நடித்துதான் ஆக வேண்டும். கவர்ச்சி அவசியம் என்றால் நடிக்கத்தான் செய்வேன். படத்தில் என்னை நீங்கள் ஒரு கேரக்டராகத்தான் பார்க்க வேண்டும். என் உடம்பை தப்பாக எவரேனும் பார்த்தால், அது அவர்களுடைய பிரச்சினை. என்னைப் பொறுத்தவரையில் என் உடம்பை ஒரு கோவிலாகத்தான் பார்க்கிறேன். என் தேகம் அழகாக இருக்கிறது. அதற்காக நான் நிச்சயம் பெருமைப்படுகிறேன்…” என்கிறார்.

ஐ லவ் யூ லெட்டர் வாங்கிய அனுபவம்..?

ஒண்ணுமே இல்லை.. என்னைப் பார்த்தாலே எல்லோருக்கும் பயம் வரும். நெருங்கி பழகியவர்களே என்னை “நீ பையன் மாதிரியே இருக்க..” என்பார்கள். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேசி விடுவேன். இதனாலேயே யாரும் இதுவரையில் என்னிடத்தில் ‘ஐ லவ் யூ’ சொன்னதே இல்லை.. எனக்கு கோபமும் நிறைய வரும். இப்போது கோபத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்து வருகிறேன்.

கல்யாணம் எப்போது..? 

என் வருங்கால கணவர் நல்ல மனமும், நல்ல புத்தியும் உள்ளவராக இருக்க வேண்டும். காதல் திருமணம்தான் செய்வேன். எப்போதென்று தெரியாது.. முதலில் அந்தக் காதலரை நான் தேடிப் பிடித்தாக வேண்டும். அதன் பின்புதான் எல்லாம்..!

Our Score