full screen background image

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் சொல்ல வரும் ‘மாரீசன்’ திரைப்படம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் சொல்ல வரும் ‘மாரீசன்’ திரைப்படம்

வினோத் விஜயன் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் வினோத் விஜயனும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கர்லபட்டி ரமேஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மாரீசன்’.

இந்தப் படத்தில் சாய் ராம் ஷங்கர் நாயகனாகவும், ஷ்ருதி சோதி, ஆஷிமா நார்வால் இருவரும் நாயகிகளாகவும் நடிக்கின்றனர். மேலும், சமுத்திரக்கனி, கலாபவன் மணி, சுதாகர், சுஜித் ஷங்கர், ஷிவா, ஜாலி, ராம்ஷாத், பல்லவி கௌடா, பானுஸ்ரீ, கல்பலதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் – வினோத் விஜயன், தயாரிப்பாளர்கள் – வினோத் விஜயன், ரவி பச்சமுத்து, கர்லபட்டி ரமேஷ், தயாரிப்பு நிறுவனம் – வினோத் விஜயன் ஃபிலிம்ஸ், இணை தயாரிப்பு நிறுவனம் – ஏக் தோ தீன் புரொடக்‌ஷன்ஸ், ஒளிப்பதிவு – ராஜீவ் ரவி, சுரேஷ் ராஜன், வினோத் இளம்பள்ளி, பப்பு, இசை – ராகுல் ராஜ், பின்னணி இசை – கோபி சுந்தர், படத்தொகுப்பு – கார்த்திக் ஜோகேஷ், தயாரிப்பு வடிவமைப்பு – சந்தோஷ் ராமன், பாடல்கள் – ரெஹ்மான், ஒப்பனை – பட்டிணம் ரஷீத், பட்னம் ஷா, சண்டை இயக்கம் – டில்லி பாபு, உடைகள் வடிவமைப்பு – மஷார் ஹம்சா, மெல்வின், ஒலி அமைப்பு – தனுஷ் நாயனார், கார்த்திக் ஜோகேஷ், விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஷிரோ ஃபிலிம் ஸ்டூடியோ, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பாடகர்கள் – சித் ஸ்ரீராம் & மது பாலகிருஷ்ணன்.

இந்த ‘மாரீசன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகிறது.

இதுவொரு சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம். குழந்தைகள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக போராடும் அரசு வழக்கறிஞர் சித்தார்த் நீலகண்டாவாக நாயகன் சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார்.

நான்கு மர்மக் கொலைகளை விசாரிக்கப் போய், அதனால் நாயகனுக்கு தனிப்பட்ட முறையில் சில இழப்புகள் ஏற்படுகிறது. அதனை அவர் எப்படி எதிர்கொள்கிறார்..? அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வருகிறார்.. என்பதுதான் இந்த மாரீசன்’ படத்தின் கதை.

Our Score