நடிகர் தனுஷின் பிறந்த நாளையொட்டி அவருக்கு இன்றைக்கு அவரது ரசிகர்களும், திரைப்பட துறையினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதே நேரம் தனுஷின் பிறந்த நாளையொட்டி அவர் தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி வரும் படத்தில்தான் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு ‘மாறன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் முதல் போஸ்டர் தனுஷின் பிறந்த நாளையொட்டி இன்று காலை வெளியிடப்பட்டது.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு – விவேகானந்த் சந்தோஷம், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், தயாரிப்பு வடிவமைப்பு – ஏ.அமரன், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கூடுதல் திரைக்கதை – விவேக், சர்பு, சுகாஷ், சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, விக்கி, உடைகள் வடிவமைப்பு – காவ்யா ராம், உடைகள் – செல்வம், தன்ராஜ், நடன இயக்கம் – ஜானி, தயாரிப்பு நிர்வாகம் – பி.ராஜ்குமார், புகைப்படங்கள் – சுரேஷ், ஒப்பனை – பி,ராஜா, கிராபிக்ஸ் – ஹரிஹரசுதன், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன், தயாரிப்பு நிறுவனம் – சத்யஜோதி பிலிம்ஸ், தயாரிப்பாளர் – டி.ஜி.தியாகராஜன், இணை தயாரிப்பு – ஜி.சரவணன், ஜி.சாய் சித்தார்த், எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன்.