‘மாயா’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ‘மாநகரம்.’
எந்தக் கதையாக இருந்தாலும் அதனை புதிய பாணியில் மக்கள் ரசனைக்கேற்ப, வித்தியாசமாக, சரியான விகிதத்தில் கொடுத்தால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை சென்ற ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘மாயா’ திரைப்படம் நிரூபித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது. ஆர்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்.
இப்போது இந்த நிறுவனம், ‘மாயா’ படத்தை தொடர்ந்து ரெண்டாவது படைப்பாக ‘மாநகரம்’ படத்தைத் தயாரிக்கவுள்ளது.
வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர், பிரமிப்போடு பார்க்கும் சென்னை போன்ற மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படி பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது… அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே இந்த ‘மாநகரம்’ படத்தின் கதைக் கரு.
இந்த நான்கு பேர் கதையிலும் ஓர் உள்தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அப்படி ஒரு “ஹைபர்லிங்” என்னும் புதுவித திரைக்கதையை த்ரில்லிங்காக அமைத்துள்ளார் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். குறும்பட இயக்குனரான இது இவரின் முதல் படைப்பாகும்.
நான்கு இளம் ஹீரோக்களாக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ஆகியோர் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு : செல்வகுமார், ஸ்டண்ட் : அன்பறிவு, இசை : ஜாவித், தயாரிப்பு : பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்.
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக முடிவடைந்தது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிவடைதுவிட்டது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. மிக விரைவில் இந்த ‘மாநகரம்’ திரைக்கு வர இருக்கிறது.









