full screen background image

‘மானாட மயிலாட’ குழுவினர் படைத்த கின்னஸ் ரெக்கார்டு சாதனை..!

‘மானாட மயிலாட’ குழுவினர் படைத்த கின்னஸ் ரெக்கார்டு சாதனை..!

கலைஞர் டிவி துவங்கிய காலத்தில் இருந்தே இப்போதுவரையிலும் மாறாமல் இருக்கும் ஒரே நிகழ்ச்சி ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சிதான்.

பிரபல நடன இயக்குநர் கலா மாஸ்டரின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் உருவான இந்த நிகழ்ச்சி முதல் பாகத்திலேயே பல்வேறுவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி, கிண்டல்களையும் தாண்டி இன்றைக்கு 10-வது பாகம் வரையிலும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமானது.

Maanada-Mayilada-Season-10

டிவி நடிகர், நடிகைகள், சினிமா நடிகர், நடிகைகள்.. திரையுலகம் பெரிதும் ரசிக்கும் நடிகைகளே நீதிபதிகளாக அமர.. இவர்களுக்கிடையே முட்டல், மோதல்.. கலாய்ப்பு.. ‘ச்சும்மா கிழி.. கிழி’ன்னு என்ற வார்த்தைக்கு கிடைத்த அகில உலக ஆதரவு எல்லாமும் சேர்ந்து இந்நிகழ்ச்சியை கலைஞர் டிவியின் ஐகானாகவே மாற்றிவிட்டது.

இப்போது இந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் 10-வது பகுதியில் நடனமாடும் கலைஞர்களை வைத்தே ஒரு புதுமையான நிகழ்ச்சியை வடிவமைத்து அதற்காக கின்னஸ் ரிக்கார்டில் இடம் பிடித்திருக்கிறார் கலா மாஸ்டர்.

Choreographer Kala Press Meet Stills (12)

‘AMES Room Illusion’ என்ற முறையின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில்தான் தொடர்ச்சியாக 40 நிமிடங்கள் நடனமாடி இந்த கின்னஸ் சாதனையைப் படைத்திருக்கின்றனர்.

இந்த முறை என்னவெனில் ஒரே மேடையில் விதவிதமான செட்டுகள் இருப்பது.. ஒருவரே பல விதமான கெட்டப்களில், பல செட்டுகளின் பின்னணியில் தோன்றி ஆடுவது. ஆடுபவர்களின் உயரக் குறைவுகள் இதில் தெரியாமல் இருக்கும் வகையில் கேமிராவின் பதிவாக்கம் இருக்க வேண்டுமாம். நடனமாடுபவர்கள் ஒரு நொடிகூட ஆடாமலும் இருக்கக் கூடாதாம். கூட்டத்தில் யாராவது ஒருவர் தவறு செய்து நின்றுவிட்டால்கூட சாதனை நிகழ்ச்சி தோல்வி என்றெல்லாம் நிறைய நிபந்தனைகள் போட்டுத்தான் இந்த நிகழ்ச்சியை சாதனைப் பட்டியலில் சேர்க்க பார்வையிட வந்த்தாம் கின்னஸ் குழு.

ஏவி.எம் ஸ்டூடியோவில் ஒரு அறைக்குள் நடக்கின்ற போட்டி நடனம் போல செட் அமைத்து இதை நடத்தியிருக்கிறார்கள். கின்னஸ் பிரதிநிதிகள் நேரில் வந்து நிகழ்ச்சியைப் பார்வையிட்டு கடைசியாக இவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து இவர்களது சாதனையை கின்னஸ் ரெக்கார்டில் இணைந்து அதற்கான சான்றிதழையும் வழங்கியுள்ளனர்.

இதற்கான அறிவிப்பு விழா நேற்று மதியம் தி.நகரில் இருக்கும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், நடன இயக்குநர் அசோக்ராஜ், நடிகர்கள் சஞ்சீவ், கோகுல் மற்றும் நடனக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Choreographer Kala Press Meet Stills (5)

விழாவில் பேசிய நடன இயக்குநர் கலா, “நான் போதுமான அளவுக்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா வேலை பார்த்துட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல சலிப்பாகி ஏதாவது வித்தியாசமா செய்யணுமேன்னு யோசிச்சிட்டிருந்தேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே முடியாது என்கிற வார்த்தையே பிடிக்காது. ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டால் அதை செஞ்சு முடிச்சே தீரணும்னு நினைத்தால் முடிச்சிருவேன். அந்த தன்னம்பிக்கை எனக்கு நிறைய இருக்கு.

என் குடும்பமே பாரம்பரியான நடனக் குடும்பம். அதனால் சின்ன வயதில் இருந்தே எனக்கு நடனத்தில் ஆர்வம் இருந்தாலும் எங்கப்பா அதை எனக்குக் கத்துக் குடுக்கலை. அப்புறமா நானேதான் ஆர்வப்பட்டு கத்துக்கிட்டேன். என்னால முடியாதுன்னு நினைச்சவங்க நான் டான்ஸ் மாஸ்டரா ஆயிட்டேன்னு தெரிஞ்சு அதுக்கப்பறுமா வாழ்த்த ஆரம்பிச்சிட்டாங்க..

சினிமா வேணாம்.. வேற ஏதாவது செய்யலாம்பான்னு யோசித்தபோதுதான் கலைஞர் டிவில கூப்பிட்டு இப்படியொரு புரோகிராமை செய்யச் சொன்னாங்க. நான் முதல்ல பயந்தேன். இது நம்மளால முடியுமா? முடியாதா?ன்னு ரொம்பவே யோசிச்சேன். கலைஞர் டிவில எனக்கு ரொம்ப சப்போர்ட் செய்து, ‘நிச்சயமா உங்களால முடியும்’ன்னு தன்னம்பிக்கை கொடுத்து ஆரம்பிக்க வைச்சாங்க..

முதல்ல இந்த ஷோவுக்கு வேற வேற டைட்டில்களையெல்லாம் யோசிச்சோம். ஒண்ணும் சரியா வரலை.. அப்போ கலைஞர் ஐயாகிட்ட பேசும்போது ‘என்ன தலைப்பு வைக்கப் போறீங்க?’ன்னு கேட்டார். ‘ஆங்கிலக் கலப்பே இல்லாமல் வையுங்கள்’ என்றார். நாங்க  யோசித்ததே ‘டான்ஸ் டான்ஸ்’, ‘டான்ஸ் ரகளை’ இந்த மாதிரிதான். ஆங்கிலக் கலப்பே இல்லைன்னா எப்படின்னு யோசித்தோம். அப்போ அவரேதான் இந்த டைட்டிலை சொன்னார் ‘மானாட மயிலாட’ என்று..!

எங்களுக்கு முதல்ல கேட்டவுடனேயே ஒரு மாதிரியாத்தான் இருந்துச்சு. இது செட்டாகுமா? நல்லாயிருக்குமான்னு.. ஆனாலும் கலைஞர் சொல்லிட்டா அதுக்கு அப்பீல் ஏது..? அப்படியே வைச்சிட்டோம். முதல் பாகத்துலேயே இதோட ரிசல்ட் எங்க கண்ணு முன்னாடி தெரிஞ்சது.. ஒரு எட்டு வயசுப் பையன் இந்த டைட்டில் ஸாங்கை அழகாப் பாடிக் காட்டினான். அசந்து போயிட்டேன்.  அப்போதான் கலைஞர் ஐயாவோட தீர்க்கதரிசனத்தை உணர்ந்தேன். அவராலதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு நல்ல டைட்டிலும், புகழும் கிடைச்சது..

10 பாகம்வரைக்கும் செஞ்சாச்சு.. இனிமேல் என்ன்ன்னு யோசிக்கும்போதுதான் இப்படியொரு ஐடியா எனக்கு வந்துச்சு. இதுவரைக்கும் இந்த நடனக் கலைஞர்கள் சங்கத்துல இருந்து யாருமே இது மாதிரி ஒரு நிகழ்ச்சி செஞ்சு கின்னஸ் சாதனை படைக்கலை. சரி.. நாம செஞ்சு பார்ப்போமேன்னு நினைச்சு களத்துல குதிச்சோம்.

Choreographer Kala Press Meet Stills (13)

பொதுவாவே, எங்க ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியின் வெற்றியில், எங்களோட வித்தியாசமான மேடை அமைப்புக்கும் பங்கிருக்கு. அதையே கின்னஸ் சாதனைக்கும் கருவியா பயன்படுத்த முடிவு செய்தோம்.

AMES ROOM ILLUSION பற்றி டான்ஸர்ஸ் முதல் கேமராமேன்வரை எல்லோருமே நல்லா தெளிவாப் புரிஞ்சுக்கிட்டோம். cubic டிஸைன்ல AMES ROOM ILLUSION என்றழைக்கப்படும் வெவ்வேறு வடிவ பிம்பங்களை எதிரொளிக்கும் கண்ணாடி அறைக்குள் ஏக் தம்மில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சி இது.

முதல்ல, கியூபிக் சைஸ்ல ஒரு அறை அமைத்தோம். அந்த அறைக்குள்ள இருக்கிற கண்ணாடிகளில் குட்டை, நெட்டைனு உருவங்கள் வித்தியாசமா பிரதிபலிச்சு குழப்பும். சொல்லப் போனால், இது ஒரு கண்கட்டு வித்தை மாதிரி.

உதாரணமா, அந்த ரூம்ல எனக்கு முன்னாடி நீங்க பூதம் போலவும், உங்களுக்கு முன்னாடி நான் எறும்பு போலவும்னு, உருவங்கள் மாறி மாறித் தெரியும். அதிலேயே நாங்க முடியையும், மூளையைப் பிய்ச்சுக்கிட்டு டான்ஸ் பிராக்டிஸ் பண்ணினோம்.

என்னோட குழுவினர் இந்த நிகழ்ச்சிக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாங்க. ஆர்ட் டைரக்டர் இந்த ஒரு நிகழ்ச்சிக்காகவே 110 செட் போட்டார். மறுபடியும் மாத்தி, மாத்தி நாங்க சொல்லிக்கிட்டேயிருந்தோம். அவரும் சளைக்காமல் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

ஏப்ரல் 18 அன்று ஷூட் செய்த இந்த கின்னஸ் சாதனை சிறப்பு நிகழ்ச்சியில, ‘மானாட மயிலாட’ சீஸன் 10 டீம், கின்னஸ் குழு முன்னிலையில் ஆடினாங்க. பார்க்க சுவாரஸ்யமா இருந்தாலும், அங்க பிழையில்லாம ஆடுறது மிகக் கடினம்.

கின்னஸ் குழுவினர், நிகழ்ச்சியின் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிச்சிட்டே இருந்தாங்க. டீம்ல எல்லோரும் செம டென்ஷனா இருந்தாலும், டெடிகேஷனோட நிகழ்ச்சியை வெற்றிகரமா நடத்தி முடிச்சு கின்னஸ் சர்டிபிகேட்டை வாங்கினப்போ… பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போயிருச்சு..!

நடன அமைப்பாளர், இயக்குநர், கலைஞர் டிவி அதிகாரிகள்ன்னு நிறைய பேரின் ஒத்துழைப்பு இருந்த்தால்தான் என்னால இதனை சாதிக்க முடிந்த்து. எல்லாத்துக்கும் மேல எங்கப்பாவின் ஆசீர்வாதமும் எனக்குக் கிடைச்சிருக்குன்னு நம்புறேன்.

‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பாஸிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் இரண்டையும் நான் சரி சம்மாத்தான் எடுத்துக்கிட்டேன். பொல்லாப்பு சொல்றவங்க சொல்லிட்டுத்தான் இருப்பாங்க. ஆனா அதுக்காக நாம செய்ற வேலையை நிறுத்திரக் கூடாது. நாம எது செஞ்சாலும் பழி சொல்றவங்க நியாயமான விமர்சகர்களாக இருக்க மாட்டாங்க.

எங்க நிகழ்ச்சியை இமிடேட் செய்தும் சிலர் வேற, வேற டிவில ஷோவெல்லாம் செஞ்சாங்க. அதைக்கூட நாங்க ஸ்போர்ட்டிவ்வாத்தான் எடுத்துக்கிட்டோம். எப்படின்னா எங்களை வைச்சு அவங்க சம்பாதிக்கணும்னு நினைக்குறாங்க. காசு பார்க்கணும் நினைச்சிருக்காங்க. ‘சரிங்க.. செஞ்சுக்குங்க.. காசு கிடைக்குதா.. வாங்கிக்குங்க. நல்லாயிருங்க.. எங்க பெயரைச் சொல்லி சாப்பிடுங்க’ன்னு சொல்லி வாழ்த்தினோம்..!

ஸோ.. அந்த எதிர்மறை கருத்துக்கள் என்னையும் எனது குழுவினரையும் எப்போதும் பாதித்த்தில்லை. இனியும் பாதிக்காது.. இந்த ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து நடைபெறும்..” என்றார்.

Our Score