‘மாநாடு’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.
விமான நிலையத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளுக்கான அனுமதி இந்தியாவில் எந்தவொரு விமான நிலையத்திலும் கிடைக்காததால், இலங்கை சென்று அந்தக் காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இலங்கையில் பயன்படுத்தப்படாத விமான ஓடு பாதை, மற்றும் விமான நிலையத்தில் இந்தப் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளதாம்.
இதையடுத்து இந்தப் படத்தின் மூன்றாவது கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்து நான்காவது கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இந்த இறுதிக் கட்டப் படப்பிடிப்புதான் படக் குழுவினருக்கு அதிக வேலை கொடுக்குமாம். ‘மாநாடு’ என்ற படத்தின் டைட்டிலுக்கேற்றபடியே மாநாடு போன்ற கூட்டத்தைக் கூட்டி அங்கே நடக்கும் சம்பவங்களை படமாக்கப் போகிறார்கள். இந்த ஷூட்டிங் எங்கே நடக்கப் போகிறது என்பதை மட்டும் இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
எப்படியும் ஏப்ரல் 15-க்குள் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஆகஸ்ட் மாதம் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.