நடிகை ஹன்சிகாவின் 50-வது திரைப்படமான ‘மஹா’ படம் வரும் ஜூன் 10-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ETCETERA என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த ‘மஹா’ படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்த மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன், நடிகர் சிம்புவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த், சனம் செட்டி, தம்பி ராமையா, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – R.மதி, இசை – ஜிப்ரான், எழுத்து, இயக்கம் – U.R.ஜமீல்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிடவுள்ளது.
முன்னதாக, வருகிற மே 27-ம் தேதி மஹா திரைப்படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு ‘மஹா’ படம் வரும் ஜூன் 10-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.