வைகைப் புயல் வடிவேலுவை திரும்பவும் ஸ்கிரீனில் பார்ப்பதற்காக தமிழகமே ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
இப்போது தெரிந்த தகவலின்படி நடிகர் வடிவேலுவும் நடிப்பதற்காக துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறாராம். இயக்குநர் ஷங்கருடன் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நஷ்ட ஈட்டினை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வடிவேலு. தன்னைவிட மற்றவர்கள்தான் இந்தப் பிரச்சினை பற்றி நிறைய பேசி வருகிறார்கள் என்று வருத்தமும் படுகிறார் வடிவேலு.
இந்த நஷ்ட ஈட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதாம். மிக விரைவில் இது முடிந்து நடிக்கத் துவங்கிவிடுவேன் என்று வடிவேலுவே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த நம்பிக்கைக்கு காரணம், அவரை வைத்து படமெடுக்க இப்போது ஒரு மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று முன் வந்திருப்பதுதான். நிச்சயமாக இந்த முறை வடிவேலு தனது ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.