full screen background image

நேற்றுதான் பூஜை.. அதுக்குள்ள தலைப்புக்கு அடிதடி..!

நேற்றுதான் பூஜை.. அதுக்குள்ள தலைப்புக்கு அடிதடி..!

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு எல்.ஐ.சி. (Love Insurance Corporation) என பெயரிடப்பட்டுள்ளதாக நேற்றைக்கு செய்திகள் வெளியாகின.

இந்தப் படத்தில் லவ் டுடே பிரதீப் மற்றும் நடிகை கீர்த்தி ஷெட்டி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்க்கிறார்கள். மேலும் யோகிபாபு, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படப்பிடிப்புக்கான பூஜை நேற்றைக்கு தொடங்கப்பட்ட நிலையில் இந்தப் புதிய படத்தின் தலைப்பு பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன் இதே எல்.ஐ.சி. என்னும் தலைப்பினை தான் பதிவு செய்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

மதிப்பிற்குறிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.

திரு விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான suma pictures இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த திரு.விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக் கோரி தனது மேலாளர் திரு.மயில் வாகனன் மூலம் என்னை அணுகினார்.

ஆனால் L.I.C. என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச் சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன்.

ஆக, இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை திரு.விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்தத் தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க, முழுக்க அதிகாரத் தன்மை கொண்டது.

அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை திரு.விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

இனியும் இச்செயலை திரு.விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

S.S.குமரன்.

Our Score