full screen background image

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் “லெனின் பாண்டியன்” – நடிகர் தர்ஷன் கணேசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் “லெனின் பாண்டியன்” – நடிகர் தர்ஷன் கணேசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் “லெனின் பாண்டியன்” தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டி.டி.பாலச்சந்திரன் இயக்கி வருகிறார்.

திரைப்படத்தை திரு. டி. ஜி. தியாகராஜன் அவர்கள் வழங்க, தயாரிப்பாளர்களாக திரு. செந்தில் தியாகராஜன், திரு. அர்ஜுன் தியாகராஜன், மற்றும் திரு. சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான தர்ஷன் கணேசனுக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி. ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், மற்றும் ராம் குமார் கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இதில் பன்முகத் திறமையாளர் கங்கை அமரன், நீண்ட இடைவெளிக்குப் பின் திரையுலகில் மீண்டும் வருகிறார் நடிகை ரோஜா, மேலும் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் இசையை சந்தோஷ் நாராயணன் அமைக்க, ஒளிப்பதிவை ஏ.எம்.எட்வின் சக்காய் கவனிக்கிறார். படத் தொகுப்பு – நாகூரான் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை ஆத்தூரி ஜேகுமார், ஆக்‌ஷன் காட்சிகளை தளபதி தினேஷ், மற்றும் நடன வடிவமைப்பை விஜயா மாஸ்டர் கவனித்து வருகின்றனர். படத்தின் பி.ஆர். பணிகளை சதீஷ் (AIM) மேற்கொள்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் வாழ்த்துகளுடன் உருவாகி வரும் “லெனின் பாண்டியன்” திரைப்படம், சத்ய ஜோதி பிலிம்ஸின் அடுத்த பெரிய வெற்றிப் படமாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Our Score