அபி சரவணனின் நடிப்பில் ஆக்சன் படமாக உருவாகும் ‘கும்பாரி’ திரைப்படம்

அபி சரவணனின் நடிப்பில் ஆக்சன் படமாக உருவாகும் ‘கும்பாரி’ திரைப்படம்

ராயல் எண்டர்ப்ரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘கும்பாரி’.

இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஜான் விஜய், பருத்தி வீரன்’ சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல்’ சுகுமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள். ஜெய் படத் தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கேல் சண்டைக் காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டி.ஐ. செய்கிறார்.

யோகிபாபுவின் நடிப்பில் வெளியான ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கெவின், இந்தப் படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த  30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை ‘கும்பாரி’ படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

‘கும்பாரி’ படம் பற்றி இயக்குநர் கெவின் பேசும்போது, “இந்தப் படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய கால மீனவ நண்பன் திடீரென காணாமல் போகிறான். காணாமல் போன நண்பனை தேடி அலைகிறார் நாயகன். இறுதியில் நண்பனை கண்டறிந்தாரா.. இல்லையா.. என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு,  முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப் பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக  ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது..” என்றார்.

Our Score