நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது நயன்தாராவின் ‘அறம்’ திரைப்படம்

நவம்பர் 10-ம் தேதி வெளியாகிறது நயன்தாராவின் ‘அறம்’ திரைப்படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அறம்'.

ஜிப்ரானின் இசையில், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில், அறிமுக இயக்குநர் கோபி நைனாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் கொட்டப்படி J.ராஜேஷ் தயாரித்துள்ளார்.

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ளது இந்தப் படம்.

'விக்ரம் வேதா' போன்ற  தரமான படங்களை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்து, தங்களது நிறுவனத்துக்கு பெரும் பெயரை பெற்றிருக்கும் 'Trident Arts' நிறுவனம் இந்த 'அறம்' படத்தை வரும் நவம்பர் 10-ம் தேதி ரிலீஸ் செய்யவுள்ளது. 

இது குறித்து 'Trident Arts' ரவீந்திரன் பேசுகையில், ''இந்த வருடத்தின் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக 'அறம்' இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குநர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா நடித்துள்ளார். 'அறம்' படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை'' என்றார்.