ஜீவா – திஷா பாண்டே நடிப்பில் ‘கொம்பு’ திரைப்படம்..!

ஜீவா – திஷா பாண்டே நடிப்பில் ‘கொம்பு’ திரைப்படம்..!

ஸ்ரீசாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.பன்னீர்செல்வம், பி.வானதி ஆகியோர் தயாரித்துள்ள திரைப்படம் ‘கொம்பு.’

இத்திரைப்படத்தில் ‘லொள்ளு சபா’ புகழ் ஜீவா கதாநாயகனாகவும், ‘தமிழ் படம்’ படத்தின் நாயகி  திஷா பாண்டே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

தேவ் குரு இசையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கிரேசன் படத் தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், கஜினி குபேந்தர் சண்டை பயிற்சியையும், கார்த்திகேயன் நிர்வாகத் தயாரிப்பையும் செய்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஈ.இப்ராகிம்.

படத்தை பற்றி இயக்குநர் ஈ.இப்ராகிம் பேசும்போது, “தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டுவித படங்களுக்கு தனி இடமுண்டு. ஒன்று திகில், இன்னொன்று நகைச்சுவை.

என்னதான் கருத்து சொல்வதுபோல படங்கள் வந்தாலும் மக்களை இவ்வகை திரைப்படங்களை ரசிக்க மறப்பதில்லை. அதுவும் திகிலும் நகைச்சுவையும் சேர்ந்து வருகின்ற படங்கள் மக்களின் பெரும் கவனிப்புக்கும் ஆதரவுக்கும் முன் வரிசையில் இடம் பிடிக்கின்றன.

kombu-movie-stills-1

இப்படி வெற்றி பெற்ற படங்களுக்கு நாம் பல உதாரணம் காட்டலாம். அப்படி திகிலும், நகைச்சுவையும் சேர்ந்து வெளிவரக் காத்திருக்கும் படம்தான் இந்த ‘கொம்பு’ திரைப்படம்.

திகில், பேய் படங்கள் வித்தியாசப்படுவது கதை சொல்லப்படும் விதத்திலும் அந்த கதையின் பயத்தை மக்களை உணர வைக்கும் நடிகர்களின் நடிப்பிலும்தான். ஏற்கனவே திகில் படங்களில் நம்மை பயப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நடிகர் பட்டாளமே, இந்த படத்திலும்  இருப்பதால் நம்மை பயத்தோடு சிரிக்கவும் வைப்பார்கள். 

ஏற்கனவே வந்த பேய் படங்களில் இருந்து புதுமையை காட்ட வேண்டும் என்ற ஆவலும், அந்த புதுமையை எவ்வளவு எளிதாக மக்களின் மன ஓட்டதோடு ஒத்துப் போகும் அளவுக்கு திரைக்கதையில் சொல்லமுடியும் என்ற முனைப்புடனும் காட்டியுள்ளோம். 

அது மட்டுமில்லாமல் இக்கதை வெறும் திகில், பேய் படம் என்று மட்டும் இல்லாமல் பெண்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பதையும் கூறியிருக்கிறோம்.

நடிகர் ஜீவா ஏற்கனவே நடித்த காமெடி, காதல் என்ற தளங்களில் இருந்து தன்னை திகில், காமெடி, காதல் என்ற மூன்று தளங்களையும் சேர்த்து தன்னை வித்தியாசப்படுத்தி நிரூபித்திருக்கிறார்.

நடிகை திஷா பாண்டே தமிழ் படத்தில் நடித்ததற்கு பிறகு இப்படத்தின் மூலம் கதைக்கு தேவையான நடிப்பையும், திரைக்கு தேவையான அளவு கவர்ச்சியும் என தனக்கான முத்திரையை மீண்டும் பதித்துள்ளார். 

சென்ற மாதக் கடைசியில் இந்தப் படத்தில் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது ‘கொம்பு’ படத்தின் பிரமோசன் பணிகள் முழு வீச்சில்  நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது..” என்றார். 

Our Score