‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’ என ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளைக் கொடுப்பதில் முன்னணியாக இருப்பது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம்.
தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தயாரித்து வரும் இந்த நிறுவனம் தற்போது தனது புதிய படத்தைத் துவக்கியுள்ளது.
வித்தியாசமான கமர்ஷியல் படமாக உருவாகும் இந்தப் படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிருக்கிறார். நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கவுள்ளார்.
ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பாளராக சித்தார்த், சண்டை பயிற்சி காட்சிகளின் இயக்குநராக மெட்ரோ மகேஷ், ஆடை வடிவமைப்பாளராக சத்யாவும் பணிபுரியவுள்ளனர்.
இந்தப் படத்தினை இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மணிகண்டன் இயக்கவுள்ளார்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று சென்னையில் நடைபெற்றது.
விரைவில் இதன் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே இதே பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய படமொன்றில் ஜீவா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஜீவா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. விரைவில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.