full screen background image

முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய பட நிறுவனம்

முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கிய பட நிறுவனம்

தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பலரும் ஒன்று சேர்ந்து புதிய பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

ஓடிடி தளங்கள் வந்த பின்பு பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி வரும் முன்னணி இயக்குநர்களின் படங்களை மட்டும் வாங்கிக் குவிக்கிறார்கள். அந்தப் படம் பேசப்படுகிறதா.. இல்லையா.. என்பது பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை. ஓடிடி தளங்களைப் பார்க்கும் வசதியுள்ளவர்கள் தொடர்ந்து சந்தாவைக் கட்டினாலே போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

இவர்களின் இந்த நினைப்பினால்தான் குப்பை படங்களையெல்லாம் முன்னணி இயக்குநர்களே தற்போது குவித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது லேட்டஸ்ட்டாக வெளியான ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் இரண்டு கதைகளைத் தவிர மற்றவைகளை குறும் பட லிஸ்ட்டில்கூட சேர்க்க முடியவில்லை. அந்த அளவுக்கான தரத்தில் இருந்தன.

இருந்தாலும் ஓடிடி தளங்களுக்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதை என்பதெல்லாம் தேவையில்லாதது என்பதால் படத்தை இயக்குபவர் முன்னணி இயக்குநராக இருந்தாலே போதும் என்ற நினைப்பில் திரும்பத் திரும்ப அவர்களுக்கே வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

இந்த வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள் இன்றைய முன்னணி இயக்குநர்கள். பல இயக்குநர்கள் ஒன்று சேர்ந்து புதிய பட நிறுவனத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றி மாறன், கவுதம் மேனன், மிஷ்கின், சசி, வசந்தபாலன், லோகேஷ் கனகராஜ், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர்தான் அந்த முன்னணி இயக்குநர்கள்.

இவர்கள் இணைந்து ஆரம்பித்திருக்கும் நிறுவனத்திற்கு ரெயின் ஆன் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ந்த நிறுவனத்தின் மூலமாக திரைப்படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளைத் தயாரிக்க உள்ளார்களாம். இதன் முதல் தயாரிப்பை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று செய்தி வந்துள்ளது.

வாங்குவதற்கு ஓடிடி தளங்கள் தயாராக இருக்கும்போது எத்தனை படங்களை வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.. இயக்கலாம்..!

Our Score