full screen background image

வைரலாகி வரும் சந்தானத்தின் காமெடி ‘கிக்’ பட மேக்கிங் வீடியோ!

வைரலாகி வரும் சந்தானத்தின் காமெடி ‘கிக்’ பட மேக்கிங் வீடியோ!

பிரம்மாண்டமான செலவில் உருவாகி வருகிறது சந்தானத்தின் காமெடி திரைப்படமான ‘கிக்’.

Fortune Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நவீன் ராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சந்தானத்துடன் நாயகியாக தன்யா ஹோப் நடிக்கிறார். மேலும், செந்தில், கோவைசரளா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான பிரமானந்தம், மன்சூர் அலிகான், Y.G.மகேந்திரன், சாது கோகிலா உட்பட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. 

படத்தை காமெடியுடன் பிரம்மாண்டமாக  உருவாக்கி, ஒரு அதிரடியான கமர்ஷியல் விருந்தாக படைத்துள்ளார் இயக்குநர் பிரசாந்த் ராஜ்.

தற்போது இறுதி கட்ட பணிகளில் இருக்கும் இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது.

நேற்று இதன் வீடியோ மேக்கிங் வெளியானது. படத்தில் நடித்திருக்கும் அனைத்து காமெடி நட்சத்திரங்களும் செய்திருக்கும் காமெடி கலாட்டா இந்த வீடியோவில் பதிவாகியிருக்க.. இப்போது இது YouTube-ல் பெரும் வைரலாகி வருகிறது.

Our Score