தயாரிப்பாளருக்கு பளார்..! நடிகையின் ஆத்திரம்..!

தயாரிப்பாளருக்கு பளார்..! நடிகையின் ஆத்திரம்..!

கடந்த 2 நாட்களாக யுடியூபில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது இது..

’ஜாலி எல்.எல்.பி.’ என்ற ஹிந்தி படம் சென்ற ஆண்டு வெளியானது. பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்த படம் இது. இதில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார் ’கீதிகா தியாகி’. இப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இப்படத்தின் ஷூட்டிங்கின்போது இதன் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுபாஷ் கபூர், கீதிகா தியாகியிடம் தவறான முறையில் நடந்து கொண்டாராம்..!

இதனால் ஆத்திரம் அடைந்த கீதிகா, தயாரிப்பாளரின் அலுவலகத்தில் அவரது மனைவியிடம் வந்து அவரது கணவர் பற்றி புகார் கூறியிருக்கிறார். ஆத்திரத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு அழுதபடியே இருந்த அவரிடம் தயாரிப்பாளர் தனது மனைவி முன்னிலையில் மன்னிப்பும் கேட்டிருக்கிறார். ஆனாலும் கோபம் அடங்காத ஹீரோயின் தயாரிப்பாளரின் கன்னத்தில் அறைந்துள்ளார். அவரது மனைவி இதனை பார்த்தும் அமைதியாக அமர்ந்திருக்கிறார். ஹீரோயின் அழுதபடியே இருக்க.. தயாரிப்பாளர் வாங்கிய அறையே போதுமென்று உள்ளே போய்விட்டார்..

இதனை தியாகியே திட்டமிட்டு செல்போனில் படமெடுத்து வைத்திருந்திருக்கிறார். இப்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு சில நாட்களுக்கு முன்னால் டிவிட்டரில் இதனை ரிலீஸ் செய்திருக்கிறார் கீதிகா தியாகி. தயாரிப்பாளர் சுபாஷ் கபூர் தனது கையைப் பிடித்திழுத்து படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றதாகவும், தான் கஷ்டப்பட்டு அவரிடமிருந்து தப்பித்ததாகவும் கூறியிருக்கிறார். 

அதை அப்போதே கூறியிருக்கலாமே என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினாலும் வழக்கம்போல இதனை வைத்து கும்மியடித்துத் தீர்த்துவிட்டன..!

Our Score