கடந்த 7 நாட்களாக கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவுக்கு எதிராக மேற்கொண்ட தர்ணா போராட்டம் இன்றைக்கு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 3 நாட்களாக வள்ளுவர் கோட்டம் வாசலில் தர்ணா போராட்டம் நடத்திய தன் மனைவி தாமரையை இன்று இரவு 9 மணிக்கு கணவர் தியாகு நேரில் வந்து சந்தித்தார்.
அப்போது இரு தரப்பினரின் பிரச்சினை குறித்து ஆய்வு செய்ய நடுநிலையான பொதுவான விசாரணைக் குழு அமைப்பிற்கு தியாகு ஒத்துக் கொண்டார். மேலும், தான் வீட்டை விட்டு வெளியேறிய செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.
சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசிய பின்பு கவிஞர் தாமரை தனது தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இதன் பின்பு இது குறித்து தியாகு தனது மனைவி தாமரைக்கு எழுதிய வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை பத்திரிகையாளர்களிடத்தில் அளித்துவிட்டு அவரும் விடைபெற்றார்.
அந்தக் கடிதம் இது :