full screen background image

உண்மைக் காதலைச் சொல்லும் ‘கட்டம் தன் கடமையைச் செய்யும்’ திரைப்படம்

உண்மைக் காதலைச் சொல்லும் ‘கட்டம் தன் கடமையைச் செய்யும்’ திரைப்படம்

தயாரிப்பாளர் புவனேஸ்வரி சங்கரின் வேங்கடபதி பிலிம்ஸ் பெருமையுடன் தனது முதல் திரைப்படத்தை மக்களுக்கு வழங்கவுள்ளது.

புதுமுக இயக்குநர் குருவேல் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு கட்டம் தன் கடமையை செய்யும்’ என்ற புதுவிதமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகர் ரிஜன் சுரேஷ் இந்த படத்தின் நாயகனாக களமிறங்குகிறார். இவருக்கு ஜோடியாக கதாநாயகியாக ஸ்ரீபிரியங்கா நடிக்கிறார்.

“நாடகக் காதலுக்கு சட்டம்தான் வேலை செய்யும்… உண்மையான காதலுக்கு கட்டம்தான் வேலை செய்யும்..” என்பதே இந்தப் படம் சொல்ல வரும் கருத்து.

படக் குழு மற்றும் பிற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும்.

 

Our Score