full screen background image

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூறாவளி’ திரைப்படம்

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூறாவளி’ திரைப்படம்

லால்ராய் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.லால் பகதூர் தயாரித்துள்ள திரைப்படம் ‘சூறாவளி’.

இந்தப் படத்தில் தர்மா, தர்ஷினி, ஆலிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜேக்கப் சாம்யேல், ஒளிப்பதிவு – சந்திரன் சாமி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாலு & பால்கி, தயாரிப்பு – P.லால் பகதூா்.

இந்த ‘சூறாவளி’ படம் பற்றி இயக்குநர்கள் பாலு, பால்கி இருவரும் பேசும்போது, “வட மாநிலங்களில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட ஒரு கும்பல் காவல்துறைக்குப் பயந்து அங்கிருந்து தப்பித்து தமிழ்நாட்டுக்குள் வருகிறது.

இங்கே வந்த அந்தக் கும்பல் பல வீடுகளில் வேலை செய்வது போல் சென்று அங்குள்ள குளியல் அறைகளில் கேமராவை மறைத்து, பெண்கள் குளிப்பதை படமெடுத்து, அதை வைத்து அப்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து பணம் பறிப்பதை ஒரு வேலையாக செய்கின்றனர். 

பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடக்கவே காவல்துறை உஷாராகிறது.

ஒரு பண்னையாரிடம் கூலி வேலைக்கு சென்ற கதாநாயகனின் நேர்மையை நேசித்த பண்னையாரின் மகள்(கதாநாயகி), நாயகனை நேசிக்கிறாள். இப்படிப்பட்ட சூழலில் அந்த கும்பல் கதாநாயகி வீட்டிலும் அதே கைவரிசையை காட்டுகிறது.

நாயகி இவர்களால் பாதிக்கப்பட்டதை அறியும் ஹீரோ அக்கும்பலை ‘சூறாவளி’ போல் சூறையாட தயாராகிறார். அவர்களை காவல்துறை சூறையாடுகிறதா…? அல்லது ஹீரோ சூரசம்ஹாரம் செய்தாரா…? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

தமிழில் கவர்ச்சியில் புகழ் பெற்ற சில்க் ஸ்மிதா அளவுக்கு கன்னடத்தில் தற்போது கவர்ச்சியில் கலக்கும் நடிகை ஆலிஷா இந்த சூறாவளி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கார். இந்தப் பாடல் காட்சியை கர்நாடகாவில் மைசூர் அருகே அரசுக்கு சொந்தமான ஒரு காட்டு பங்களவில் அனுமதி வாங்கி படமாக்கியிருக்கிறோம். இந்தப் பாடல் காட்சிதான் படத்தில் ஹைலைட்டான விஷயம்..” என்கிறார்கள்.

Our Score