திருட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையையும், திரைக்கதையையும் மட்டும்தான் மீஞ்சூர் கோபியிடமிருந்து திருடி ‘கத்தி’ படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று நினைத்திருந்தோம்.
அடுத்தடுத்து வருகின்ற நியூஸ்களையெல்லாம் பார்த்தால் ஒட்டு மொத்த படமே காப்பிகளின் கலவையாகத்தான் இருக்கும் போலிருக்கிறது.
தன்னை தாக்க வரும் ரவுடிகளை தாக்குவதற்காக விஜய் சதீஷுடன் இணைந்து மெயின் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு நடத்தும் சண்டை காட்சிகூட ஒரு ஆங்கில படத்தில் இருந்து சுட்டதுதானாம்.
அந்த ஒரிஜினல் சண்டை காட்சி இங்கே :
‘கத்தி’ படத்தின் தீம் மியூஸிக் என்று இசையமைப்பாளர் அனிருத் போட்டிருந்த இசைகூட ஒரு மியூஸிக் ஆல்பத்தில் இருந்து சுட்டதுதான் என்கிறார்கள்.
அந்த ஒரிஜினல் இசை இங்கே :
கொல்கத்தா சிறையில் இருந்து தப்பித்த கைதியைப் பிடிக்க திட்டம் போடும்போதும், சென்னை குடிநீர் குழாய்களை கண்டறிய விஜய் கொல்கத்தா ஜெயில் மற்றும் சென்னை மாநகர மேப்புகளை வாங்கி பார்த்துவிட்டு கண்ணாலாயே அத்தனையையும் புட்டு புட்டு வைப்பாரே..
இதுவும் நேஷனல் ஜியாகரபிக் சேனலில் வெளிவந்த பிரேக் அவுட் என்கிற தொடரில் இருந்து சுட்டதுதானாம்..
அந்த ஒரிஜினல் சீன் இங்கே :
இந்தக் ‘கத்தி’ல இன்னும் என்னென்ன காப்பிகள் இருக்கோ.. தெரியலையே..?