காதலிக்க நேரமில்லை படத்தை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..?
நகைச்சுவை படம் என்கிற பெயருக்கே ஒரு தனித்த அடையாளத்தை தமிழ்ச் சினிமாவில் பெற்றுள்ள ஒரே படம் இதுதான்..
ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ், காஞ்சனா, ராஜஸ்ரீ, சச்சு, டி.எஸ்.பாலையா, வி.எஸ்.ராகவன் என்று பலரது நடிப்பில் வெளியான இந்தப் படத்திற்கு இனிமையான இசையை அமைத்திருந்தார்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடி.
இப்போதுவரையிலும் இந்தப் படத்தின் பாடல் காட்சிகளும், நகைச்சுவை காட்சிகளும் ஏதாவதொரு தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகிக் கொண்டுதான் இருக்கின்றன.
1964-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி வெளியான இந்தப் படம் இப்போது 50 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதற்கான விழா வரும் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காமராஜர் அரங்கத்தி்ல் நடைபெறவுள்ளது. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.