full screen background image

சல்மான்கானின் ‘கிக்’ திரைப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியது..!

சல்மான்கானின் ‘கிக்’ திரைப்படத்தின் வசூல் 300 கோடியைத் தாண்டியது..!

பாலிவுட்டில் வருடாவருடம் ஓடும் பல பெரிய படங்களும் ஒன்றையொன்று முந்திக் கொண்டுதான் ஓடிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ரெக்கார்டுகளை முறியடிக்க அடுத்த படம் உடனே வரும் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம்.

‘பாலிவுட் பாஷா’ என்று செல்லமாக அழைக்கப்படும் சல்மான்கான் நடித்த ‘கிக்’ படம் இப்போதுவரையில் உலகம் தழுவிய வசூலாக 350 கோடியைத் தொட்டிருக்கிறதாம்.. இது சல்மான்கானின் பட வியாபாரத்தில் சாதனை என்கிறார்கள் பாலிவுட் புள்ளிகள்..

படம் வெளியான முதல் நாளில் இருந்தே பல சாதனைகளை இந்தப் படம் முறியடித்தே வந்திருக்கிறது.. 100 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் இப்போதைய வசூலை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

படம் வெளியான முதல் வாரத்தில் 100 கோடி, இரண்டாவது வாரம் 200 கோடி, மூன்றாவது வாரம் 300 கோடி என்று கோடி மேல் கோடியாக அள்ளிக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானிலும், அரபு நாடுகளிலும்கூட இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அங்கு மட்டும் வசூலான தொகை 25 கோடி ரூபாயாம். இந்தியாவில் இந்தாண்டு வெளிவந்த படங்களிலேயே இதுவரை அதிக வசூலைக் குவித்துள்ள படம் இதுதான்.

இப்படத்தின் இயக்குனரான சஜித் நடியவாலாவிற்கு முதல் படம். அறிமுக இயக்குநரின் முதல் படமே 300 கோடி ரூபாய் வசூலைத் தொடுவது இந்திய சினிமா துறையில் இதுதான் முதல் முறை..

இத்தனைக்கும் இது தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படம். தெலுங்கில் 2009-ம் ஆண்டு ரவி தேஜா, இலியானா நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த ‘கிக்’ படத்தின் ரீமேக்குதான் இது.  இந்தப் படம் தமிழிலும் ‘தில்லாலங்கடி’ என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது நினைவிருக்கலாம்.. தமிழில்தான் வசூலைக் கோட்டைவிட்டுவிட்டது.

Presenting the much awaited trailer of Sajid Nadiadwala’s directorial KICK!

The film stars Salman Khan, Jacqueline Fernandez, Randeep Hooda and Nawazuddin Siddiqui.

Our Score