full screen background image

பெப்சி அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு..!

பெப்சி அமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு..!

தமிழ் சினிமாவின் உச்சபட்ச அமைப்பான ‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் 2014-2014-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்  இன்று நடைபெற்றது.

இத்தேர்தலில் சென்ற முறை செயலாளராக இருந்த சிவா இந்த முறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிவாவிற்கு 49 ஓட்டுக்களும், எதிர்த்து நின்ற ஸ்டண்ட் சிவாவிற்கு 13 ஓட்டுக்களும் கிடைத்தன. நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருக்கும் கே.ஆர்.செல்வராஜ் பெப்சியின் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கே.ஆர்.செல்வராஜுக்கு 44 ஓட்டுக்களும், இவரை எதிர்த்து போட்டியிட்ட உமாசங்கர்பாபுவிற்கு 18 ஓட்டுக்களும் கிடைத்தன. எஸ்.ஆர்.சந்திரன் புதிய பொருளாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

fefis leaders

மேலும் துணைத் தலைவர்களாக கே.ஜி.ஜீவானந்தம், டி.கே.மூர்த்தி, வி.ராமன். ஏ.எபிநேசன், கே.சம்பத் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக ஆர்.தனபால், என்.ராதா, ஆர்.எஸ்.ராஜா, பி.ரமணபாபு, ஆர்.ஸ்டாலின் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

fefsi office bearers 2014-2016

தேர்வு செய்யப்பட்ட அனைவரும் இன்று மாலை வடபழனி இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக் கொண்டார்கள்.

புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்..!

Our Score