“மீகாமன்’ போலவே ‘கப்பலும்’ சக்ஸஸ்தான்..” – சொல்கிறார் இயக்குநர்..!

“மீகாமன்’ போலவே ‘கப்பலும்’ சக்ஸஸ்தான்..” – சொல்கிறார் இயக்குநர்..!

இந்த வருடக் கடைசி வாரமான சென்ற வெள்ளியன்று வெளியான 5 படங்களில் ‘மீகாமன்’, ‘கயல்’, ‘கப்பல்’, ‘வெள்ளைக்கார துரை’ ஆகிய நான்கு படங்களுமே சினிமா ரசிகர்கள் பார்க்க காத்திருந்த படங்கள்.

இதில் ‘மீகாமன்’ திரைப்படம் வசூலிலும், மவுத் டாக்கிலும் முதலிடத்தில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மையைத் தவிர மற்றதையெல்லாம் பேசி வரும் கோடம்பாக்கத்தின் பாக்ஸ் ஆபீஸ  செய்திகள் ‘கயல்’, ‘கப்பல்’, ‘வெள்ளைக்கார துரை’ என்று படங்களின் வெற்றியை வரிசைப்படுத்துகின்றன.

‘மீகாமன்’ படத்தின் வெற்றி விழா நேற்றைக்கு நடந்து முடிந்துவிட்டது. இன்றைக்கு ‘கப்பல்’ திரைப்படத்தின் வெற்றி விழா அல்ல.. மீடியாக்களுக்கு நன்றி சொல்லும் விழாவாக நடத்திவிட்டார்கள்.

மேடையேறிய படக் குழுவைச் சேர்ந்த 12 பேரும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமாக ‘தேங்க்யூ ஸோ மச்’ என்ற ஒரு வாக்கியத்தை வைத்தே பேசி முடித்துவிட்டனர்.

கேள்வி பதில் சீஸன் துவங்கியதும், “மீகாமன்னும் சக்ஸ்ஸ்ன்னு சொன்னாங்க. இப்போ நீங்களும் சொல்றீங்க..? யார் படம்தான் ஜெயிச்சது..?” என்ற கேள்விக்கு “ஒரே கிளாஸ்ல ரெண்டு ஸ்டூடண்ட்ஸ் ஒரே மார்க் எடுக்குறதில்லையா..? அது மாதிரிதான் ஸார் இது. நாங்களும் ஜெயிச்சிட்டோம்.. கப்பல் சக்ஸஸ்தான்..” என்று உறுதியாகச் சொன்னார் இயக்குநர்.

“கப்பல்’ படத்தை ஷங்கர் முறைப்படி ஒப்பந்தம் செய்து விலைக்கு வாங்கித்தான் விநியோகம் செய்திருக்கிறார்…” என்றார் இயக்குநர்.

“கப்பல்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் டபுள் மீனிங் டயலாக்குகளெல்லாம் தேவைதானா?” என்றதற்கு “அடுத்த படத்தில் சமூக பொறுப்போடு அதில்லாமல் எடுக்கிறேன்..” என்றாரே ஒழிய, இப்போது ஏன் எடுத்தார் என்று இயக்குநர் சொல்லவேயில்லை..

எப்படியோ அடுத்தப் படத்தில் அது இல்லாமல் இருந்தால் சரிதான்..!

Our Score