full screen background image

தமிழ்நாடு-கேரளா மாநில வில்லன்களின் கதைதான் ‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’..!

தமிழ்நாடு-கேரளா மாநில வில்லன்களின் கதைதான் ‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’..!

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளிகொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘ஒரே ஒரு ராஜா மொக்கராஜா’ என்று பெயரிட்டுள்ளனர்

இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.  காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்று ஒரு நாயகியாக அஸ்வினி நடிக்கிறார். ஸ்ரீரக்ஷா சில மலையாளப் படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார். வில்லனாக சாகர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் ‘தலைவாசல்’ விஜய், வனிதா, பாலாசிங், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மயில்சாமி விஜய்கணேஷ், நெல்லை சிவா, வெங்கட்ராவ், சிவசநாராயண மூர்த்தி, சிசர் மனோகர், இந்திரன், அம்பிகா மோகன், எம்.ஆர்.கோபகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு : அய்யப்பன்.N

இசை : சுமன்பிச்சு

பாடல்கள் : ஏகாதசி

கலை – ஸ்ரீனி

எடிட்டிங் : சாஜன்

நடனம் : சாந்தகுமார்

ஸ்ட்ண்ட் –  ரன்ரவி

தயாரிப்பு நிர்வாகம் : ஸ்ரீகுமார்

வசனம் : பொன். பிரகாஷ்

கதை : வினோத்லால்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு   –  சுரேஷ்

தயாரிப்பு : உல்லாஸ் கிளி கொல்லூர்

கதை, திரைக்கதை இயக்கம்  – சந்தோஷ் கோபால்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்.

“ஒரு தாதாவிடம் நட்பு வைக்கும் நாயகனின் குடும்பம் மற்றும் நாயகம் சந்திக்கும் பிரச்னைதான் கதை. தமிழ்நாடு, கேரளா இந்த இரு மாநிலங்களின் பார்டரில் இருக்கும் இரு வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள்தான் இந்த படத்தின் திரைக்கதை.

இந்த  படத்திற்காக கலிங்கராஜபுரம் என்ற இடத்தில் இருபத்தைந்து லாரி புல்லுகட்டுகளை கொண்டு  60 அடி அகலம், 80 அடி நீளமும் கொண்ட பிரமாண்டமான அரண்மனை அமைக்கப்பட்டு, அதில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.  “அடிடா  மேள தாளம்   பொறந்தாச்சு நல்ல காலம்“ என்ற அந்த  பாடல் காட்சியில் நாயகன், நாயகி மற்றும் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட  நடனக் கலைஞர்கள் பங்குபெற சுமார் இருபது நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது..” என்றார் இயக்குனர் சந்தோஷ் கோபால்.

Our Score