full screen background image

‘கயல்’ படத்தில் கலக்கியிருக்கும் ‘யோகி’ தேவராஜ்..!

‘கயல்’ படத்தில் கலக்கியிருக்கும் ‘யோகி’ தேவராஜ்..!

தேவராஜ் என்கிற கம்பீரமான பெயருடன் தாடிக்குள் முகத்தை மறைத்துக் கொண்டு உலா வரும் மூத்தப் பத்திரிகையாளர் தேவராஜ் அண்ணன்.

அப்படியே காவி வேஷ்டியையும், கழுத்தில் ருத்ராட்ச மாலையையும் அணிவித்து ஏதாவது ஒரு கோவில் பக்கம் அழைத்துச் சென்றால் காலில் விழுபவர்களின் எண்ணிக்கையும் கூடும். அப்படியொரு சினிமாத்தனமான தோற்றம் அண்ணனுக்கு..!

‘தினகரன்’ தேவராஜ் என்றே பல வருடங்களாக அழைக்கப்பட்டவர், 2009-ம் ஆண்டில் இருந்து ‘யோகி’ தேவராஜ் என்று கூப்பிடும் அளவுக்கு உயர்ந்தார்.

2009-ம் ஆண்டு சுப்ரமணியம் சிவா இயக்கிய ‘யோகி’ என்ற படத்தில் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்ததில் இருந்து இவர், ‘யோகி தேவராஜாக’ மாறினார்.

‘யோகி‘ படத்திற்கு முன்பேயே சில படங்களில், சில காட்சிகளில் உலா வரும் நடிகராக காட்சியளித்திருந்தாலும் ‘யோகி’தான் இவரை ஒரு நடிகராக கோடம்பாக்கத்தில் பளிச்சென்று அறிமுகப்படுத்தியது.

‘யோகி’யைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் 31 படங்களில் நடித்து முடித்திருக்கிறார் அண்ணன் ‘யோகி’ தேவராஜ்.

1) குற்றப்பத்திரிகை 

2) சூர்யா

3) ஜெர்ரி

4) ராம்

5) யோகி (குணச்சித்திர நடிகராக அறிமுகம்)

6) விலை

7) நானே என்னுள் இல்லை

8) முத்துக்கு முத்தாக

9) அழகர்சாமியின் குதிரை

10) முதல் இடம்

11) தேரோடும் வீதியிலே

12) என் பெயர் குமாரசாமி

13) முப்பொழுதும் உன் கற்பனைகள் (எனது காட்சிகள் இடம்பெறவில்லை)

14) அமரா

15) ஒத்தவீடு

16) கம்பன் கழகம்

17) வன யுத்தம் (தமிழில் எனது காட்சிகள் இடம்பெறவில்லை)

18) அட்டஹாசா (‘வன யுத்தம்’ படத்தின் கன்னடப் பதிப்பு)

19) ஒரு நடிகையின் வாக்குமூலம்

20) பாண்டி ஒலிபெருக்கி நிலையம்

21) அழகன் அழகி

22) பொன்னர் சங்கர் (எனது காட்சிகள் இடம்பெறவில்லை)

23) நீர்ப்பறவை

24) சொகுசு பேருந்து

25) நெல்லை சந்திப்பு

26) ஒன்பதுல குரு

27) உ

28) பாலக்காட்டு மாதவன்

29) ஆக்கம்

30) கயல்

31) சதுரன்

சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘கயல்’ படத்தில் தேவராஜ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக வெளிச்சத்தை அவருக்குக் காட்டியிருக்கிறது. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலராலும், பேசப்பட்டு வரும் வேளையில் தனது நடிப்பாற்றல் இப்படத்தின் மூலம் அதிகமாக வெளிப்பட்டதற்கு இயக்குநர் பிரபு சாலமனுக்கு நன்றி கூறுகிறார் தேவராஜ்.

இத்தனை பிஸியிலும் பத்திரிகை பணியையும் கைவிடாமல் தொடர்ந்து பத்திரிகையாளராகவும் எங்களது மத்தியில் வலம் வரும் அண்ணன் தேவராஜுக்கு நமது வாழ்த்துகள்..!

Our Score